பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 125

கோளிமரப் பாட்டு

"மஞ்சக்குருவி ஊஞ்சலாடுதே

தளாங்கு தக ததிங்கிணத்தோம்' (மஞ்ச)

(என்றோ-அல்லது) "தாராபுரம் குயிலே தங்கி வா-அப்படித்

தாளம் மத்தளம் கொஞ்சம் போட்டு வா'

இப்படி ஒரு வேடிக்கையான பாடலைப் பாடிக்கொண்டு வந்து சூஸ்த்ரதாரருக்கு வணக்கம் செய்வான். பிறகு நீண்ட தர்க்க வாதத்திற்குப் பின், தான் ஒரு விகடகவி என்பான்.

சூஸ் : தங்கள் ஊர்?

கோ : மாதுர், பிதுர், ஸ்வான, பைனி, புரம்

சூஸ் : என்னையா...ஊரைக் கேட்டால் ஏதேதோ சொல்லு

கிறீர்!

கோ : அதுதானய்யா...என் ஊரின் பெயர். மாத்ரு என்றால் அம்மா, பித்ரு என்றால் அப்பா-ஸ்வானன்னா நாய். பைனின்னா அக்கா. புரம்ன்னா ஊரு...ஆக அம்மையப்ப நாய், அக்கா, என் ஊர்-அம்மையப்ப நாயக்கனூர்.

சூஸ் பேஷ்...பேஷ்...வினோதமான விளக்கம். ரொம்ப சந்தோஷம். இன்று நடைபெறப்போகும் நாடகத்திற்கு ஹாஸ்ய ரஸம் தேவையாயிருந்தது. தங்கள் வருகை யால் நவரஸமும் பூர்த்தியாகி விட்டது. விக்கினமின்றி நாடகம் நடைபெற மகா கணபதியைத் தோத்திரம் செய்வோம்.

(கணபதி தோத்திரம் பாடப்படும். பாடல் முடிந்து திரை நீங்கியதும், கணபதி காட்சி தருவார்) இருவ : நமஸ்காரம்...