பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கவிஞர் கு. சா. கி.

கணபதி : கல்யாண், குஸ்த்ரதாரா, கைலையங்கிரியில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், யக்ஷ, கின்னர, கிம்புருட, கந்தர்வ, சித்த, வித்யாதரர் புடைசூழ, என் பிதாவின் வாமபாகத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவியின் சவ்யங்கத்தில்(மடியில்) அமர்ந்திருந்த யாம், உனது தீனமான துதியைக் கேட்டு அகமகிழ்ந்து இங்குப் பிராப்தமானோம். உனக்கு யாது வரம் வேண்டும்? .

சூஸ் : இன்று நடைபெறவிருக்கும் சாவித்ரி-சத்தியவான்

நாடகம் விக்கினமின்றி நடைபெற வேண்டும்.

கண : அவ்வண்ணமே அருள் பாலித்தோம். மங்கள

முண்டாகும். -

கோமா : எம் பொஞ்சாதி, மங்களம், உண்டாயிருக்கா, இப்ப ஆறுமாசம். ஏஞ்சாமி அது எப்படி ஒங்களுக்குத் தெரியும்? அதுசரி...பொறக்குறது ஆணா பெண்ணாசொல்லுங்களேன்.

கண : அடே...நீ விகடகவியாகக் கடவது!

(திரை விழுகிறது)

(சரஸ்வதி துதி பாடுதல்) (திரை நீங்கியதும், சரஸ்வதி தோற்றம்) சூஸ் : வாணி, சரஸ்வதி! எங்கள் நாடகம் சிறப்பாக நடை

பெற ஆசீர்வதிக்கப் பிரார்த்திக்கிறேன்.

சர : அப்படியே...அருள் பாலித்தோம். சூஸ் : விகடரே...பிரம்மாவின் நாவில் வாசம் செய்யும்

தேவிக்கு நமஸ்காரம் செய்யுங்கள். விகட ஐயா...ஒரு சந்தேகம்...இவங்க எப்போதும் பிரம்மா வின் நாவில்தான் இருப்பாங்களா?...அப்படியானால்... மல...ஜலம்...