பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

விருந்து சிறிது தாழ்த்திவிட்டனர் என்ற உண்மையையும் இந்நூலாசிரியர் ஒப்புக் கொள்கிறார். கவிஞர் கு. சா. கி. சமாதானம் கூறிய பின்னரும் 'கோவலன்' நாடகம் பற்றி எழுந்துள்ள கருத்து வேற்றுமை நீடிக்கத்தான் செய்யும். அது எப்படியிருப்பினும், 'கோவலன்' நாடகம் பற்றி இந் நூலாசிரியர் தெரிவித்துள்ள கருத்துக்களையும் புலவருலகம் படித்தறிய வேண்டும்.

தேச விடுதலைப் போராட்ட காலத்தில் தேசபக்தியை வளர்த்த நாடகங்கள் பற்றியும், நடிகர்கள் பற்றியும் இந் நூலில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நானறிந்தவரை வேறு நூல்களில் கிடைக்காத செய்திகளை இந்நூலில் பெற முடி கிறது. நாடக மேடைக்கென்றே புனையப்பட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கிய தேசியப் பாடல்கள் சில வற்றை முழுசாகவும், இன்னும் சிலவற்றின் சுவைமிக்க பகுதிகளையும் ஆசிரியர் கு. சா. கி. இந்நூலில் கொடுத்துள் ளார். எனது நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் நாடகக் கலைஞரான ‘முத்தமிழ்க் கலாவித்துவரத்தின' ஒளவை தி. க. சண்முகம் உள்ளிட்ட டி. கே. எஸ். சகோதரர்களை யும், அவர்களால் நாடக உலகில் ஏற்பட்ட முற்போக்கான மாறுதல்களையும் ஆசிரியர் கு. சா. கி. விரிவாகக் கூறி யுள்ளார். மிகுந்த முயற்சியெடுத்து ஆராய்ந்து இந்த நூலில் எழுதியுள்ளார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பயன்படத்தக்க இந்த அரிய தகவல் நூலை வழங்கிய நாடகாசிரியர் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை மனமுவந்து பாராட்டுகிறேன். இதனையடுத்துத் தமிழ் இசையைப் பற்றியும் ஆசிரியர் கு. சா. கி. நூல் எழுதி வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழ் வாழ்க! நாடகக் கலை வளர்க!

ம. பொ. சிவஞானம்