பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கவிஞர் கு. சா. கி.

இளம் அழகிய ஆண்-பெண் பாத்திரங்கள் மேடையில் தோன்றி, ஊடல், கூடல், இன்பம் ஆகிய சரச சல்லாபக் காதல் பாடல்கள் சிலவற்றைப் பாடி நடித்து, அவையோரின் உள்ளத்தில் இன்பக் கிளர்ச்சியை எழுப்பிச் செல்வார்கள். இதற்குக் கார ண ம்- பின்னே தொடரவிருக்கும் அரிச்சந்திரா, சாவித்ரி, சீதா வனவாசம், நல்ல தங்காள் போன்ற துன்பியல் நாடகத்தின் துயரக்காட்சிகளைக் கண்டு மனவேதனையடையவிருக்கும் மக்களின் மனதிற்குச் சற்று ஆறுதல் அளிப்பதற்காகவே, இந்த இன்பியல் காட்சிகளை ஏற்படுத்தி இருக்கலாமென்று நினைக்கிறேன்.

நாடகக்கலை புத்துயிர்பெற்ற பொற்காலம்

இருபதாம் நூற்றாண்டு தொடங்கி அரை நூற்றாண்டு காலம்வரை தமிழ் நாடகக்கலை புத்துயிர்பெற்ற பொற்கால மென்று கூறலாம். வடநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்து, உயர்ந்த காட்சி அமைப்புகளோடும், கட்டுக்கோப் போடும் நாடகங்களை நடத்தி வெற்றிகண்ட பாலிவாலா கம்பெனி, பார்ஸி கம்பெனி, கிருஷ்ணமாச்சார்லுவின் தெலுங்கு நாடகங்கள். தமிழர்களிடையே நாடகக் கலைக்குப் பெரும் மதிப்பையும், ஆர்வத்தையும் தூண்டியதன் காரண மாகத் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்களையும் பல்வேறு நாடகக் குழுக்களையும் தோற்றுவித்தன. பெரு நகரங்கள் முதல் சிற்றுார்கள் வரை எங்கும் தொடர்ந்து நாடகங்கள் நடைபெறலாயின ஆண்களோடு பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு பலர் பெரும்புகழ் பெற்றனர். ஆண்கள் பலர் பெண் வேஷத்தில் புகழ் பெற்றதைப்போல் பெண்களும் ஆண்வேடமிட்டுத் திறமையாக நடித்துப் புகழ் பெற்றனர்.

1910ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் புகழ் பெற்றவர் களாக விளங்கிய நடிகர் நடிகையர் பட்டியலைப் பார்த்தால் மிகவும் வியப்பாகத் தோன்றும். இவர்களில் பலர் தங்களின் நட்சத்திரப் புகழையே மூலதனமாகக்கொண்டு, தனித்