பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 129

தனியே பல நாடகக் குழுக்களை நடத்தி வந்தனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள். தஞ்சை கோவிந்தசாமிராவ், ஸ்திரி பார்ட் சுந்தர்ராவ், ராஜபார்ட் ஜகந்நாத நாயுடு, கள்ளக் குறிச்சி சாமினாதப்பிள்ளை, ராஜாமணி அம்மாள், மனச்ச நல்லூர் ராமுடு ஐயர், ஸ்திரிபார்ட் சீனிவாச ஆழ்வார், வெங்கடசாமி ஐயர், ராஜபார்ட் சூரியநாராயண பாகவதர், ஸ்திரிபார்ட் சின்னசாமா ஐயர், ஓரடி முத்துவேல் பிள்ளை, ஜீவரத்தினம்மாள், ராஜா எம். ஆர். கோவிந்தசாமி பிள்ளை, அரங்கநாயகி அம்மாள், கோபன்னாநாயுடு, வி. பி. ஜானகி அம்மாள், ஜி. எஸ். முனிசாமிநாயுடு, கும்பகோணம் பாலா மணி அம்மாள், துளசி அம்மாள் என்ற கருப்பாயி அம்மாள் (சுந்தரவாத்தியாரின் தாயார்) இராமர் மாணிக்கம்பிள்ளை, மனமோகன அரங்கசாமி நாயுடு, பி. எஸ். தானுவாம்பாள், கோல்டன் சாரதாம்பாள், கோவிந்தசாமி நாயுடு, டி. எம். கமலவேணி, எஸ். ஆர். கமலம், பாலம்மாள், பி ராஜாம் பாள். கும்பகோணம் நாகரெத்தினம்மாள், கொண்டித் தோப்பு சாரதாம்பாள். டி. பி. ராஜலஷ்மி, கே.எஸ். அனந்த லசஷ்மி, டி. டி. தாயம்மாள், கோரங்கி மாணிக்கம், கிறுக்கு கோவிந்தசாமி பிள்ளை, அல்லி பரமேஸ்வர ஐயர், ராவன கோவிந்தசாமி, ராவண குப்புசாமி, ஆஞ்சநேய சாரங்கபாணி, டி. நாராயணசாமி பிள்ளை, கே. சீனிவாசப்பிள்ளை, ஒரடி வண்ணக்களஞ்சியம் சாமினாத முதலியார், ராக்ஷஸ் பார்ட் ராமசாமி ஐயர் ஆகியோர் அந்தக்கால நாடகக் கலைஞர்களில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். ஒவ் வொருவரும் சொந்தமாக நாடகக் குழுக்களையும் நடத் தினர். ஆயினும் மிகப்பெரிய முதலீடு செய்து விரிவான முறையில் வலுவான அமைப்பாக விளங்கிய நாடகசபைகள் இரண்டு. அவற்றுள் ஒன்று. சி வெங்கடாசல முதலியார் நடத்திய ஆலந்துார் கம்பெனி மற்றொன்று தி. நாராயண சாமிபிள்ளை அவர்களின் கம்பெனி இவ்விரண்டு நிறுவனங் களும் தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை-யாழ்ப்பாணம் எங்கும் சென்று தங்கள் புகழ்க்கொடியை நாட்டின. பிற் காலத்தில் ஆலந்துார் கம்பெனியை ஜகன்னாதய்யர்