பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 131

15-ம் வயதிலேயே கவிதைத் துறையில் திறம்பெற்று விளங்கிய இவர், புலவரேறு எனப் புகழ்பெற்று போற்றப் பெறும் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கேட்டுப் பெரும் புலமை பெற்றுப் பின்னர் நாடகத்துறையில் நாட்டங்கொண்டு, ராமுடுஐயர், நடேச தீகூஜிதர், கல்யாண ராமய்யர், சாமி நாயுடு ஆகியோர் களின் நாடக சபைகளில் ஆசிரியராகவும், நடிகராகவும் பெரும் புகழ்பெற்று விளங்கினார்.

கருத்துப் பருத்துக் கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட சுவாமிகள் பெரும்பாலும் இராவணன், இரணியன். எம தருமன் கடோத்கஜன், நள தமயந்தியில் சனீஸ்வரன் போன்ற வேடங்களைத் தாங்கி நடிப்பதைக்கண்டு அதிர்ச்சி யுற்று, ஒரு கர்ப்பிணிப் பெண் கருச்சிதைவுற்றாளென்றும், நாடகம் முடிந்து விடியற்காலை நேரத்தில் சனிஸ்வரன் வேடத்தோடு சாமிகளைக் கண்ட ஒரு பெண் பயந்து, அதே இடத்தில் மாரடைப்பினால் இறந்துவிட்டாளென்றும், அக் காலத்தில் கதை கதையாகப் பேசிக் கொள்வார்கள்.

சத்தியவான் சாவித்திரி-கோவலன் நாடகத்தில் கற்பின் சிறப்பு பற்றியும், அரிச்சந்திரன் நாடகத்தின் பெருமையை விளக்கியும், சூஸ்திரதாரராக வந்து பேசும் வியாக்யானங்கள் குறித்து, அக்காலப் புலவர் பெருமக்களே வியப்படைவார் களாம். இவரது புலமையை வியந்து யாழ்ப்பாணப் பெரும் புலவர் மன்றத்தினர் வலம் புரிச் சங்கம் ஒன்றைப் பரிசு வழங்கிப் போற்றிச் சிறப்பித்தனர்.

இத்தகைய புலமை பெற்றிருந்த சுவாமிகள், யாது காரணம் பற்றியோ வாழ்க்கையில் வெறுப்புற்று, இளமைப் பருவத்திலேயே காஷாயம் தரித்துத் துறவியாகி, சில ஆண்டுகள் தெய்வத்தலங்களெங்கும் தெரிசித்துப் பக்திப் பரவசத்துடன் பாடிப் பவனி வருங்கால், பழனி முருகன் சன்னிதியில், புதுக்கோட்டை மகாவித்வான் மாண்பூண்டியா