பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கவிஞர் கு. சா. கி.

பிள்ளை அவர்கள் சுவாமிகளின்பால் அன்புகொண்டு அரவணைத்து, அபிமான புத்திரராகச் சிலகாலம் தனது இல்லத்திலேயே வைத்து உபசரித்து, சுவாமிகள் இயற்றிய வண்ணச் சந்தங்களையெல்லாம் பாடச்செய்து ரசித்தும், தாமே கஞ்சீரா வாசித்தும் மகிழ்வாராம் .

சுவாமிகளின் புலமைச் சிறப்பும், கலைத்திறமும் நாடக உலகிற்குத் தேவை என்று நினைத்த அபிமானத் தந்தை மாண்பூண்டியாபிள்ளை அவர்களின் அ ைபுக் கட்டளைக்கு இணங்கியே, சுவாமிகள் மீண்டும் நாடக உலகிற்குத் தொண்டாற்ற வந்தார்.

புலமைக் காய்ச்சல் என்ற சிறுமைக்குணம் சுவாமிகளிடம் என்றுமே இருந்ததில்லை. தண்டபாணி சுவாமிகளிடம் தன்னோடு சகமாணவராகத் தமிழ் பயின்ற உடுமலை முத்துச்சாமிக் கவிராயர், ஏகை. சிவசண்முகம்பிள்ளை, குடந்தை வீராச்சாமி வாத்தியார், சித்திரக்கவி சுப்பராய முதலியார் போன்ற சமகாலப் புலவர்கள்பால் பெருமதிப்பும், பேரன்பும் கொண்டு பழகி வந்த பெருந்தன்மை பாராட்டுதற் குரியதாம்.

1885-ம் ஆண்டு தொடங்கி 1922-ம் ஆண்டு இறுதி மூச்சு இருக்கும் வரை கலை உலகின் ஒளிச்சுடராய் திகழ்ந்த பெருமை, சுவாமிகள் ஒருவருக்கே உரிமை. ஏன் இன்றுவரை யிலும் கூட சுவாமிகளுக்கு நிகரான ஒரு சர்வகலா வல்லவன் தமிழகத்தில் பிறக்கவில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

அக்காலத்தில் சுவாமிகள் தொடர்பு கொள்ளாத நாடக சபைகளோ அவரிடம் பயிற்சி பெறாத நடிகர்களோ அநேக மாக இல்லையென்றே சொல்லலாம்.

தாறுமாறாக அவரவர் நினைத்தபடியெல்லாம் நடத்தி வந்த புராண, இதிகாச கற்பனைக் கதைகளுக்கெல்லாம் ஒழுங் கான வடிவமைப்பைக் கொடுத்து, அவைகளுக்கேற்ற