பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 133

பாடல்களையும், உரைநடைகளையும் அமைத்துக் கொடுத்து, தாமே சொந்தமாகப் பவழக்கொடி, அல்லி அர்ஜுனா, சாரங்கதாரா, சிறுத் தொண்டர், பிரஹலாதன், பிரபுலிங்க லீலை, நல்ல தங்காள், சத்தியவான் சாவித்ரி, கோவலன், வள்ளி திருமணம். ஞான செளந்தரி, மணிமேகலை, சதி அனுசூயா, சுலோசனாசதி, சீமந்தனி, அபிமன்யு சுந்தரி போன்று சுமார் 40 நாடகங்களுக்கு மேல் எழுதித் தமிழ் நாடகக் கலையின் தரத்தை உயர்த்தினார்.

இதைத் தவிர, ஷேக்ஸ்பியரின் ரோமியோஜூலியத், சிம்பலைன் போன்ற ஆங்கில நாடகங்களையும், மிருச்சகடிகம் போன்ற வடமொழி நாடகங்களையும் தமிழாக்கம் செய்து, புதுமையைப் புகுத்தினார்.

அவருடைய நாடக உரையாடல்களில், சங்க இலக்கிய சான்றுகளும், திருக்குறள், ஒளவையாரின் நீதிச் செய்யுட் களும், மிக எளிய முறையில் எடுத்துக் கையாளப்பட்டிருப் பதைக் காணலாம்.

சுவாமிகளின் நாடகப் பாடல்கள் எல்லாம் சொற்சுவை பொருட்சுவை மிகுந்தும், இலக்கணக்கட்டுக் கோப்பு நிறைந் தும், பாத்திரங்களுக்கேற்ற மெட்டுகளில் பல்வேறு ராகங் களிலும், தாளங்களிலும் அமைந்தும், மிக உயர்ந்த கருத்து களையும் எளிய இனிய சொற்களைக் கொண்டு விளக்கும் . அந்தப் பாங்கு பாமரர் முதல் பண்டிதர்கள் வரை விரும்பிப் போற்றுவதாகவிருக்கும்.

நடிப்புத்திறன், பயிற்சியளிக்கும் ஆற்றல், நாடகங்களை அமைக்கும் தகுதி, நாடகங்கள் இயற்றும் சக்தி, சங்கீத ஞானம், பல்வேறு தாளவின்யாசங்களில் தேர்ச்சி, தானே இசையமைத்துக் கொண்டு பாடல்களையும் பாடும் மேதா விலாசம், வண்ணம், சந்தம், சிந்து, கலித்துறை, கலிப்பா, விருத்தம், வெண்பா ஆகிய அனைத்துத் துறையிலும் இணை யற்ற புலமை, இலக்கண-இலக்கியத் தெளிவு; சிறியோர் முதல் பெரும்புகழ்பெற்ற கலைஞர்வரை அனைவரையும்