பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கவிஞர் கு. சா. கி.

அடக்கி ஆளும் ஆளுமை, நிறுவனங்களை நடத்திச் செல்லும் நிர்வாகத்தில் சாதனை, இத்தனையும் சேர்ந்த மொத்த வடிவம்தான் சுவாமிகள்.

சுமார் நான்கு மணிநேரம் நடைபெறும் ஒரு நாட கத்தை, கதை, காட்சி, அமைப்பு, பாடல்கள், வசனம் ஆகிய அனைத்தையும் ஒரே நாள் இரவில் அடித்தல் திருத்தலின்றி எழுதும் ஆற்றல், சுவாமிகள் ஒருவருக்கே இருந்ததுஎன்பதை நேரில் கண்டறிந்த திரு ஒளவை சண்முகம் அவர்கள், தமது 'நாடகக் கலை' என்னும் நூலில் எழுதியிருப்பதைக் கண்டு வியப்படையாதிருக்க முடியாது.

சுருக்கமாகச் சொல்வதானால், இந்த இருபதாம் நூற் றாண்டின் நாடகக்கலையைச் சுவாமிகளின் சகாப்தம் என்றே கூற வேண்டும்.

மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், கோவை, கும்பகோணம் போன்ற நகரங்களில் இன்றும் நூற்றுக் கணக்கான நடிகர் நடிகையர் சுவாமிகளின் கோவலன், அல்லி அர்ஜுனா, பவழக்கொடி, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில் நடிப்பதன் மூலமே தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிரஞ்சீவித் தன்மை பெற்ற அவரது நாடகங்களும் அவரது புகழும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கலைக்குக் கரைகண்ட கலைஞர்

சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரின் காலத்திலேயே, மனோன்மணியம் என்னும் அற் புதமான நாடகநூல் ஒன்றை அகவல் நடையில் எழுதி அழியாப் புகழ்பெற்ற சுந்தரனார் அவர்களும் இருந்தார். சுவாமி விபுலானந்தரின் மதங்க சூளாமணி என்னும் நாடக இலக்கண நூலுக்குப்பின், நாட்க இயல் என்ற அருமையான நாடக இலக்கண நூல் இயற்றிய பெருமைக்குரியவரான திரு வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள் என்னும் பரிதி