பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 135

மாற் கலைஞரின் நாடகக் கலைத்தொண்டு பாராட்டுக்குரிய தாகும். ஆங்கிலத்திலும், வடமொழியிலும், தமிழிலும் புலமைப்பெற்ற இவர், தமிழுக்கே முதலிடம் தந்து, தனதுவட மொழி இயற்பெயரையே தமிழ்மொழிப் பெயராக மாற்றிக் கொண்ட தமிழ்ப் பற்று, ஆங்கிலப் பித்தர்களுக்கு விட்ட அறை கூவலாகும். அவர் தாமே இயற்றிய நாடக இயல் என்னும் நாடக இலக்கணத்துக்குப் பொருந்தும் வகை யில் கலாவதி, ரூபாவதி என்ற இரு நாடக நூல்களை உரை நடையிலும் மான விஜயம் எனற நாடக நூலை அகவற் பாவிலுமாக இயற்றி, அந்த நாடகங்களில் தாமே பங்கேற்று நடித்துப் புகழ்பெற்றதோடு, நாடகக் கலைக்கும் பெருமை சேர்த்தார்

புலமைத் திறமும் புரட்சி மனமும் படைத்த இப் பெரி யாரின் ஆயுள் காசநோயின் கொடுமையால் 33 வயதிற்குள் முடிவுற்றது. நாடகக்கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இசை நாடகங்கள்

முற்றிலும் இசைப்பாடல்களே நிறைந்தனவாகவும், இடை இடையே சிறிது உரைநடையும் கலந்தனவாகவும் எழுதப் பெற்ற நாடகங்கள், பெரும்பாலும் சென்ற நூற் றாண்டின் இறுதியிலிருந்து, இந்த நூற்றாண்டின் இடைப் பட்ட காலம் வரை, நூற்றுக்கணக்கான நாடகங்கள் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பெற்றன.

இவர்களில் மிகச்சிறந்தவர் என்றும், தமிழ் நாடகத் தந்தையென்றும் போற்றப்பெரும் சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் நாற்பதுஇசை நாடகங்களையும்; சீர்காழி அருணா சலக் கவிராயர் அசோமுகி, அரிச்சந்திரா, ராமநாடகம் ஆகிய வற்றையும். முத்துச்சாமி கவிராயர், விபீஷண சரணாகதி, பீஷ்மர் சபதம், ஞானசெளந்தரி, தயாநிதி, கண்ணாயிரம், இராமாயணம், லோபி போன்ற நாடகங்களையும்,