பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கவிஞர் கு. சா. கி.

பெங்களுர் அப்பாவுப்பிள்ளை அவர்கள் அரிச்சந்திரா நாடகத் தையும்; ஏகை சிவசண்முகப்பிள்ளை இராமாயணம், கண்டி ராஜா என்ற நாடகங்களையும்; கா. ரா. நமச்சிவாய முதலி யார் கீசகவதம் என்ற நாடகத்தையும்; மற்றும் பல்வேறு நாடகாசிரியர்கள் மகாபாரதம், தசாவதாரம், கிருஷ்ணலீலா, கந்தலிலா, சந்திரகாசன், பூரீ ஆண்டாள், இராமனுஜர், மயில் ராவணன், அலிபாதுஷா புல்புல் ஹயான், மஞ்சு கோஷா, டம்பாச்சாரி, சதாரம், தூக்குத்துக்கி, தாராசசாங் கம், அதிருப அமராவதி போன்ற அதி அற்புதமான இசை நாடகங்களை இயற்றிச் சிறப்பித்தனர்.

மறுமலர்ச்சி நாடகத் தந்தை சம்பந்தனார்!

1891ம் ஆண்டில் சுகுணவிலாஸ் சபா என்ற பயில் முறைக் குழுவைத் தோற்றுவித்து, சுமார் தொண்ணுறு நாடகங்களுக்கு மேல் எழுதியும் தயாரித்தும் தாமே நடித் தும், நாடகக் கலைக்குப் பெருந்தொண்டு புரிந்த நீதிபதி பத்மபூஷண் பம்மல் சம்பந்தமுதலியாரின் பெருமை இன்றையத் தலைமுறையினருக்குத் தெரியாது. அதற்கான முயற்சியும் குறைவு.

நாடகக்காரன் என்றால் தீண்டத் தகாதவன், ஒழுக்க மில்லாதவன், கூத்தாடி என்றெல்லாம் சமுதாயம் அருவெறுத்து ஒதுக்கிய-ஒதுங்கிய நிலையைப் போக்கிய பெருமை அவருக்கே உரியதாகும்

பட்டதாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர் கள், அரசியல் அறிஞர்கள் பொருளாதாரப் புலவர்கள், செல்வச்சீமான்கள் ஆகிய பல்வேறு அந்தஸ்துள்ளவர்களை யெல்லாம் நடிகர்களாக்கியதன் மூலம், தொழில் நடிகர களும் பெருமைக்குரிய கலைஞர்களாகப் பாராட்டுப் பெறும் நிலையைத் தோற்றுவித்தார்.

சிறந்த நாடகங்களை எழுதும் திறனும் பயிற்சியளிக்கும் திறனும் பெற்றதோடு மட்டுமின்றி, சிறந்த நாடகாசிரியர்