பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கவிஞர் கு. சா. கி.

பிள்ளை கம்பெனி, பி.ராஜாம்பாள், சி.எஸ்.சாமண்ணாஐயர் கம்பெனி, டி. கே. எஸ். கம்பெனி, பி. எஸ். வேலுநாயர் கம்பெனி, உறையூர் மொய்தீன் சாயபு அவர்களின் ராமானு கூல் சபா ஆகிய நாடக சபைகள் அனைத்திலும் ஆசிரியப் பொறுப்பேற்று, நவீன நாவல் நாடகங்களை மேடையேற்றி மேல் நாட்டு நடிகர்களுக்கு இணையான நடிகர்கள் பல நூறு பேர்களை உருவாக்கினார். வெறும் புராண இதிகாச நாடகங் களையே திரும்பத் திரும்ப நடத்தி வந்த நாடகமேடையில், நடிகர்கள் கோட்டும் சூட்டும் போட்டு ஆங்கில பாணியில் நடிக்கும் முறைகளைப் புகுத்தினார்.

அதற்குத் தகுந்த முறையில் திரு ஜே. ஆர். ரங்கராஜா வின் ராஜாம்பாள், ராஜேந்திரா, சந்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன், மோகனசுந்தரம்; வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா போன்ற நவீன நாவல்களையெல்லாம் தேர்ந்தெடுத்து, நாடக வடிவம் கொடுத்து, காட்சிகள் வகுத்து, அருமையான உரையாடல்களை அமைத்து, நடிப்பு பயிற்சியளிப்பதில் இணையற்ற ஆற்றல் பெற்றிருந்த தனது திறமையால், தமிழக நாடக மேடையில் பெரும் புரட்சியும் புதுமையும் விளைவித்தார்.

தாமே எழுதித் தயாரித்த நாவல் நாடகங்களைத் தவிரப் பம்மல் சம்பந்த முதலியாரின் மனோஹரா, லீலாவதி சுலோசனா, கள்வர் தலைவன், ரத்னாவளி போன்ற நாடகங் களும், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் அவர்களின் கதரின் வெற்றி, தேசியக்கொடி, பதிபக்தி, பம்பாய் மெயில், கவர்னர்ஸ்கப் போன்ற நாடகங்களும் தொழில்முறை நாடக சபைகளில் நடைபெற, அவரே காரணமாக இருந்தார்.

அக்கால நாடக உலகிலும், பிற்காலத்தில் திரைப்பட உலகிலும் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்த பி. எஸ். வேலு நாயர், அனந்தநாராயண ஐயர், செல்லப்பா ஐயர், எம். ஜி. நடராஜபிள்ளை, கே. சீனிவாசப்பிள்ளை,