பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கவிஞர் கு. சா. கி.

பலமுறை அடித்துக்கொண்டு. அந்த இடத்தைவிட்டே போய்விடுவார். சிலசமயம் நோட்டுப் புத்தகத்தைக் கிழித் தெறித்துவிட்டுச் செல்வதும் உண்டு. இதற்குக் காரணமா யிருந்த நடிகர் தன்னை நையப்புடைத்திருந்தாலும் அத்தனை வேதனைப்படமாட்டார் தன் தவறுக்காக வாத்தி யார் தன்னையே தண்டித்துக் கொண்டதை நினைந்து நினைந்து கண்ணிர் சிந்தி வேதனைப்படுவார். வாத்தியா ரிடமே சென்று அழுது, அதுபற்றி மன்னிப்புக் கேட்பார். அந்தக் கணமே வாத்தியாரின் கோபம் மறைந்துவிடும். அரவணைத்து ஆறுதல் கூறித் தேற்றுவார். அதே நடிகன் அடுத்த முறை ஒத்திகை பார்க்கும்போது எச்சரிக்கையோடு தவறின்றி நடித்துவிட்டால், அன்று அவன் பாடு வேட்டை தான் ஹோட்டல், சினிமா, கடைவீதி இப்படி எங்கும் அழைத்துப் போவார், ஏகமாய்ச் செலவு செய்வார். துணிமணிகள், சோப்பு சீப்புக் கண்ணாடி பெளடர் சென்ட் இத்யாதிப் பரிசுகளும் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், வாத்தியார் அவர்கள் எம்.கே. ராதா அண்ணன் ஒருவருக்கு மட்டுமே தந்தையல்ல; கம்பெனிப் பிள்ளைகள் அனைவருக்குமே தந்தையாக இருந் தார். ராதா அண்ணனும் அப்படித்தான்; எல்லோருக்கும் சகோதரராகவே அன்பு செலுத்துவார்.

நடுவயதிலேயே துணைவியாரை இழந்துவிட்ட வாத்தி யார் அவர்களுக்குத் தன் ஒரே மகன் எம். கே. ராதாவைத் தவிர வேறு குடும்பபாரம் எதுவும் இல்லை.

இருவருமே இடையறாது கம்பெனிகளில் பணியாற்றி கைநிறைய ஊதியம் பெற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். ஆயினும் வாத்தியாரின் இறுதிக்காலத்தில் தனக்கென்றோ தன் ஒரே மகனுக்கென்றோ எதுவும் சேர்த்து வைக்கவில்லை. வருவாய் அனைத்தையும் கம்பெனிப் பிள்ளைகளுக்கே செலவு செய்து, அதில் மகிழ்ச்சியடையும் பேருள்ளம் கொண்டவர் வாத்தியார். .