பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 141

இப்படிப்பட்ட் பேருள்ளம் படைத்த வேறு சிலரும் நாடகக்கம்பெனிகளில் இருந்திருக்கிறார்கள். சமையற்காரர், சீன்மேஸ்திரி, ஓவியர், நிர்வாகி, சில பெரிய நடிகர்கள். இப் படிப் பல பேர் கம்பெனியிலுள்ள சிறுவர்களிடம் தாய்மைக் குரிய பாசத்தையும், சகோதரனுக்குரிய அன்பையும் காட்டித் தங்கள் ஊதியத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டு மகிழ்வதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அதனால் தான் நாடகத்தில் சேர்ந்த சிறுவர்கள் அதை விட்டுப்போக நினைப்பதில்லை. அத்ததைய மனித தெய்வங்கள் நிறைந்த நாடகக்கலைக் குழுக்கள் இன்று பொய்யாய்ப் பழங்கதை யாய்ப் போனதை நினைத்தால், எந்தக் கலைஞனும் வருந் தாமல் இருக்க முடியாது.

சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர்

பம்மல் சம்பந்தமுதலியார், எம். கந்தசாமிமுதலியார் இருவருக்கும் அடுத்தபடியாக, மறுமலர்ச்சி நாடகங்களை எழுதியும், பால மனோகர சபா என்னும் பெயரில் தாமே சொந்தத்தில் நடத்திய நிறுவனத்தின் மூலம், அநேக நாட கங்களைத் தயாரித்து நடத்தியும் புகழ்பெற்றவர், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் அவர்களாவார்.

காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டக் கனல் எங்கும் பரவியிருந்த அக்காலத்தில், மதுவிலக்குத் திட்டத்திற்கு உரமூட்டும் வகையில் பதிபக்தி நாடகத்தையும், கதர் இயக் கத்திற்கு ஆதரவாக கதரின் வெற்றி என்ற நாடகத்தையும், நாகபுரிக் கொடிப் போராட்டத்தை மையமாக வைத்து தேசியககொடி என்னும் நாடகத்தையும், குதிரைப்பந்தயத் தால் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிவதை எடுத்துக்காட்டும் கவர்னர்ஸ் கப் என்னும் நாடகத்தையும், பம்பாய் மெயில் ராஜா பர்த்ருகிரி போன்ற நாடகங்களையும் நடத்தி, அர சாங்கத் தடை, அடக்குமுறைகளுக்கெல்லாம் ஈடுகொடுத்து எதிர் நீச்சல் போட்ட தேசபக்த மாவீரர் பாவலர் ஆவார்.