பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கவிஞர் கு. சா. கி.

தமிழகத்தில் தடை விதிக்கப்பெற்ற தேசிய நாடகங் களை, லண்டன் மாநகரிலேயே, தம் குழுவினருடன் சென்று பிரிட்டிஷ் ராணியின் முன் நடித்துக்காட்டி வெற்றி கண்ட இவரது செயலைச் சிங்கத்தை குகையிலேயே சென்று வெற்றி கண்ட வீரனின் துணிவுக்கு ஒப்பிடலாம்.

டி. கே. எஸ். சகோதரர்கள் சொந்தக் கம்பெனி தொடங்குவதற்கு முன், சில ஆண்டுகள் பாவலர் கம்பெனி யில் நடித்தார்கள். பம்மல் சம்பந்தனாரின் மாணவர்களில் கந்தசாமி முதலியார், வி. சி. கோபாலரத்தினம் ஆகியோ ரைப்போல், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலரும் சிறந்த நடிகராகவும், நாடகாசிரியராகவும் விளங்கினார்.

அந்நாளைய சிறந்த தேசபக்தர்களின் வரிசையில் முன் னணியில் திகழ்ந்த பாவலர் அவர்கள், மதுரைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களின் தமயனாராவார்.

மற்றும் பல நாடகப் பெரும் புலவர்கள்

அக்கால நாடகப் பெரும் புலவர்களாக இருந்த மற்றும் பல மேதைகளைப் பற்றியும் நான் இங்கு குறிப்பிடவேண்டும். உடுமலை முத்துசாமிக்கவிராயர், ஏகை சிவசண்முகம்பிள்ளை, குடந்தை வீராச்சாமிக் கவிராயர், சந்தான கிருஷ்ண நாயுடு, சித்திரக்கவி சுப்பராய முதலியார், சங்கரலிங்கக் கவி ராயர் , சிதம்பரம் ரெங்கராஜுலு நாயுடு, மதுரை பாஸ் கரதாஸ், ராஜா சண்முகதாஸ், லசஷ்மணதாஸ், சுந்தரம் வாத்தியார், உடுமலைநாராயணக்கவி மற்றும் எத்தனையோ மாமேதைகள், அந்தக் கால நாடகமேடையைப் பரிமளிக்கச் செய்தவர்களாவர்.

மிகுதியும் பாடல்களே நிறைந்த அக்காலப் புராண இதி காச நாடகங்களுக்கு, இவர்கள் யாத்தளித்த பொருள் பொதிந்த இலக்கண வழுவற்ற, சந்தச் சுவை மிகுந்த