பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 143

எளிமையும் இனிமையும் நிறைந்த பாடல்கள் கேட்கக் கேட்கக் கர்ணாமிருதமாய் இருக்கும்.

இவர்களில் முத்துச்சாமிக் கவிராயர் அவர்கள் பலவேறு நாடக நிறுவனங்களில் ஆசிரியராகவும், இளமையில் உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது புலமையை வியந்து, தமிழ்த்தாத்தா உ. வே. சாமி நாதய்யரும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பாண்டித் துரைத் தேவரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

கன்னிவாடி ஜமீந்தார் அப்பய்ய நாயக்கர் இவரது புலமைக்கு மதிப்பளித்துத் தம் ஆஸ்தான வித்வானாக வைத்துக் கொண்டதுடன், சந்தச் சரபக் கவி' யென்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

இளமையில் மாம்பழக் கவியிடமும், பிறகு சங்கரதாஸ் சுவாமிகளின் சகமாணாக்கராக இருந்து தண்டபாணி சுவாமி களிடமும் தமிழ் பயின்று புலமை பெற்றுச் சிறந்த காரணத் தால், சுவாமிகளும் கவிராயரும் கடைசிவரை உளம் ஒத்த நண்பர்களாய் இருந்தனர்.

சந்தான கிருஷ்ண நாயுடு, சங்கரலிங்கக் கவிராயர்,

உடுமலை நாராயணக்கவி ஆகியோர் முத்துசாமிக் கவிராய ரின் சிறந்த மாணாக்கர்களாவர்.

இவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த மற்றொரு பெரும் புலவர் ஏகை சிவ சண்முகம் பிள்ளையாவர். ஏகை என்பது சென்னையிலிருந்து திருப்போரூர் செல்லும் வழியில் உள்ள ஏகாட்டு ர் என்னும் சிற்றுாராகும்.

இவர்,பல்லாண்டுகள் சி. கன்னையா அவர்களின்நாடகக் குழுவிலும், வேறு சில நாடகக் குழுக்களிலும் ஆசிரியராய் இருந்து பணியாற்றியுள்ளார்.

இவர் எழுதிய இராமாயண நாடகமும், கண்டிராஜன் என்னும் நாடகமும் மிகப் பிரபலமானவையாகும்.