பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கவிஞர் கு. சா. கி.

அப்பாவுபிள்ளையின் அரிச்சந்திரன்நாடகத்திற்கு இணை யாக வேறொரு அரிச்சந்திரன் நாடகம் தோன்றவில்லை. அதைப்போல்தான் சங்கரதாஸ் சுவாமிகளின் கோவலன், பவழக்கொடி, அல்லிஅர்ஜூனா, வள்ளித்திருமணம், சதியனு சூயா போன்ற நாடகங்களுக்கிணையாக வேறு நாடகங்களை யாராலும் எழுத முடியவில்லை.

அதைப்போலவே, ஏகை சிவசண்முகனாரின் ராமாயணம் கண்டிராஜன் ஆகிய இரு நாடகங்களுக்கு இணையாக வேறு யாராலும் தோற்றுவிக்க முடியவில்லை

சென்ற எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் தோன்றிய எல்லா நாடகக் குழுவினரும், ஏகை சிவசண்முகம் பிள்ளையின் ராமாயணத்தையும் கண்டிராஜனையும்தான் நடத்திவந்தார்கள். இவர் இயற்றியுள்ளபாடல்கள் அவ்வளவு உயர்வானவைகளாகும் பாத்திரங்களுக்குத் தக்கவாறும் ரசபேதங்களுக்குப் பொருத்தமாகவும், ராக தாளச் சந்தச் செறிவுகள் பொருந்த-உரையாடலைப் போன்றே எளிமை யான பதங்களைக் கொண்டுஅமைத்துள்ள பாடல்கள், என்றென்றும் சாகாவரம் பெற்றவைகளாகும்.

ஏகையாரின் இராமாயண நாடகம் அரங்கேறியபின், எல்லா நாடகக் குழுவினரும் அவருடைய பாடல்களைத் தவிர வேறு பாடல்களைப் பாடுவதில்லை.

'ஆறுதல் சினமே" என்னும் இராமன் பாடல், காதலாகி னேன் சாமி என்னும் சூர்ப்பநகையின் பாடல், கால தாமதம் நீ செய்யாதே' என்னும் இராவணன் பாடல், இன்று போய் நாளைவா'-என்னும் இராவணன் பாடல், இவைகளைப் போல் இன்னும் எண்ணற்ற பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்ற பாடல்களாகும்.

அதேபோல் கண்டிராஜன் நாடகப் பாடல்கள் அனைத் தும் அருணகிரிநாதரின் திருப்புகழ் சந்தங்களில் அமைந்தவை களாகும். அந்தப் பாடல்களின் சந்தச் செறிவுகளும்