பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 147

என்னும் பாட்டாளிப் பறையன் உண்மை, நேர்மை, உழைப்பு, பக்தியென்ற ஒளிச் சுடரைக் கொண்டு, நிலப் பிரபுத்துவக் கொடுமையென்னும் இருளை அகற்ற எடுத்துக கொள்ளும் துணிவு, இவைகளைத்தான் நாம் எடுத்து"

கொள்ள வேண்டும்.

சொற்சுவையும் பொருட்சுவையும் சந்கச் செறிவும் இசைநயமும் கொண்ட நந்தன் சரிதக் கீர்த்தனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் சாகாவரம் பெற்றவை களாகும். முதன் முதல் புரட்சிப் பாதையைத் தொடங்கி வைத்தகோபாலகிருஷ்ண பாரதியாருக்குத் தமிழகம் என்றும் நன்றி செலுத்த வேண்டும்.

கன்னையா செய்த கலைப்புரட்சி

1915ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டுவரை தமிழ் நாடகக்கலை உலகின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பெருமை திரு. கன்னையா அவர்களுக்கே உரியதாகும். அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தில் எத்தனையோ .5TL-55F5のLJ56庁 புகழ்பெற்று விளங்கின. எனினும் திரு கன்னையா அவர் ஆளுடன் இந்து வினோத சபா நட்சத்திரக் கூட்டத் கிடையே ஒளி வீசிக்கொண்டு உலாவரும் முழு நிலாவுக்கு இணையாக விளங்கிற்று.

அதுவரை தமிழகம் கண்டிராத புதுமையான அதிசயக் காட்சி அமைப்புக்கள்; அற்புதமான மின்சார ஒளிவிளக்கு களின் வண்ண ஜால வித்தைகள்; கண்னைப் பறிக்கும் உன்னதமான தங்கம் வெள்ளிச் சம்கி ஆடைகள், கிட்ட), போன்ற நடிகர்களுக்கு உண்மையான வைரக்கல் பதித்த பொட்டு, மோகினி வேஷத்திற்கு அணியும் வைர முக்குத்தி: கீதோபதேசத்தை விளக்கும் வெள்ளிச்சரிதை பதித்த வெல் வெட்டுத்திரை, வெள்ளி ரதம்; யானை, குதிரை, மாடுகள் மயில்கள் போன்ற உயிருள்ள பிராணிகள்; கூrராப்தி ಕೆಟಾ! காட்சி, வைகுந்தக் காட்சி, ரதசாரத்ய பாணியிலேயே