பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கவிஞர் கு. சா. கி.

அமர்ந்து கொண்டு கிருஷணன் அர்ஜூனனுக்குக் கீதோப தேசம் செய்யும் காட்சி இவைகளையெல்லாம் தயாரிப்பதற்கு பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்வதற்கு அந்தக் காலத்தில் எத்தனை துணிவு வேண்டும் ஏறத்தாழ ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஒரு பவுன் 50 ரூபாய் விற்ற காலத்தில் கன்னையா அவர்களின் நாடகக் கம்பெனியின் ஓவியருக்கு ஊதியம் ரூபாய் ஆயிரம் இசை யமைப்பாளருக்கு ரூபாய் ஐந்நூறு உணவு, உடை முதலிய எல்லாம் இலவசமாகக் கொடுத்து மேற்கண்ட ஊதியத்தையும் கொடுத்து பம்பாயிலிருந்து இதற்கென்றே தேர்ந்த நிபுணர்களை வரவழைத்துக் காட்சி அமைப்பிலும், இசையமைப்பிலும் புதுமைகளைப் புகுத்தினாரென்றால், நாடகக் கலையில் அவருக்கிருந்த நம்பிக்கையை, பக்தியை, துணிவை என்னவென்று சொல்லிப் பாராட்டுவது! திரு. கன்னையாவின் அதிர்ஷ்டம் சங்கரதாஸ் சுவாமிகளிடம் இளமைதொட்டே பயிற்சிபெற்ற கிட்டப்பா சகோதரர்களின் கர்ணாமிர்தகானமும் கைகொடுத்தது. அது மட்டுமல்ல மகாராஜபுரம் எம். ஆர். கிருஷ்ண முர்த்தி, டி. எஸ். சந்தானம், பி. பி. ரங்காச்சாரி, சி. வி. வி. பந்துலு, இப்படிப் பட்ட சங்கீதக் கலைமாமணிகள் ஒருசேர நின்று போட்டி போட்டுக்கொண்டு இசை மழை பொழியவும், காட்சிகளும், ஆடை அணிகளும், வண்ண விளக்குகளும் கண்ணைக் கவர வும் தசாவதாரம், ஆண்டாள், ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணலீலா, வள்ளித்திருமணம், பகவத்கீதை முதலிய தெய்வீகக் கதைகளையே அதிகமாக நடத்தியதால், இவருடைய நாடகங்களுக்கு மக்கள் திருவிழாக் கூட்டம் போல் திரண்டுவந்து நாட்கணக்கில் காத்திருந்து நாடகத் தைக் கண்டு களித்தனர். அக்காலத்தில் கிட்டப்பா அவர்கள் இராமாயணத்தில் பாடிய "தசரதராஜ குமாரா' என்ற பாடலும், தசாவதாரத்தில் மோகினியாக வந்து பாடிய பாடலும் தேவா அசுர குலத்தோரே-திவ்ய அமுதம் உமக்கே நானே தருவேன் பெருவீரே' என்ற பாடலும்.