பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 151

வானம் பார்த்த சீமை, பாடுபட்டுப் பயிர் செய்கிறான் அந்தப் புஞ்சை நிலத்திலே ஏழை விவசாயி. அவனிடம் கொள்ளைவரிகேட்டுத் தொல்லைப்படுத்துகிறான் வெள்ளைக் காரன். வரிகொடுக்க மறுக்கும் அந்த ஏழை உழவனின் துணிவைப் படம் பிடித்துக்காட்டுகிறது மற்றொரு பாடல்:

ஊரான் ஊரான் தோட்ட த்திலே ஒருவன் போட்டான் வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக் காரன் ,

யாரோ ஒழைச்சிப் பாடுபட்டால்-இவன் யாரு வந்து வரி கேக்குறது-இங்கே நேரா வரட்டும் பாத்துக்கிறேன்-சங்கை நெறிச்சி உசிரே மாய்ச்சிடுறேன்!

எத்தகைய வீர உணர்ச்சியை சுதந்திர ஆவேசத்தைத் தூண்டுகிறது, இந்தத்தெருக்கூத்துக்கலைஞர்களின் நாட்டுப் பாடல்! பெரிய பேச்சாளர்களும் மெத்தப் படித்த மேதாவி களும்கூடச் சாதிக்க முடியாத தேசபக்தி உணர்ச்சியை இக் கலைஞர்கள் கிராமிய மக்களிடத்தில் வளர்த்தனர் என்றால், அது மிகையல்ல.

சுதேசி இயக்கம் சூடுபிடித்திருந்த அக்காலத்தில், நாடகக் கலைஞர்கள் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தொண்டு மிகப் பெரியதாகும். -

போலீசாரின் கெடுபிடிகளுக்கும், அன்னிய ஏகாதிபத்ய அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொடுமைகளுக்கும் சிறிதும் அஞ்சாமல், நூற்றுக்கணக்கான நாடகக் கலைஞர்கள் தீவிர தேசபக்தர்களாகச் செயல்பட்டனர் நாடகக் கவிஞர்களெல் லாம் நூற்றுக்கணக்கில் தேசீய எழுச்சிப் பாடல்களை எழுதிக் குவித்தனர். நடிகர்-நடிகையர்களெல்லாம் அப் பாடல்களை ஊர்தோறும்-மேடைகள் தோறும் பாடிப்பாடி