பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கவிஞர் கு. சா. கி.

வீர முழக்கம் செய்து, நாட்டு மக்களை விடுதலைப் போர்க்கள வீரர்களாக மாற்றும் பணியில், தங்களைத் தாங்களே அர்ப் பணித்துக் கொண்டனர்.

தேசீயப்பாடல்களை இயற்றித் தந்த நாடகக் கவிஞர் களில் குறிப்பிடத்தக்கவர்கள் மதுரை பாஸ்கரதாஸ், ராஜாசண்முகதாஸ், பூமிபாலகதாஸ், கவிக்குஞ்சர வாத்தி யார், குடந்தை வீராச்சாமி கவிராயர், சந்தான கிருஷ்ண நாயுடு, வீரநாதக்கோனார், எசக்கி முத்து வாத்தியார் மற்றும் பலராவர்.

சிறைச்சாலைக்கும், போலீஸ் அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல், மேடைகள் தோறும் தேசீயப் பாடல்களைப் பாடி மக்களைத் தட்டியெழுப்பியவர்களில் குறிப்பிடத்தக்க வர்கள்: எஸ் விஸ்வநாததாஸ். வி. எஸ் சுந்தரேசய்யர், ஓரடி முத்துவேல்பிள்ளை, பைரவசுந்தரம்பிள்ளை, எம்.ஜி.நடராஜ பிள்ளை. கே.எஸ். அனந்தநாராயணய்யர். எம்.எஸ் தாமோ தரராவ், எஸ். ஜி. கிட்டப்பா, கே பி ஜானகி, கே பி சுந்த ராம்பாள், எஸ். ஆர். ஜானகி, டி. எஸ். வேலம்மாள், கே பி கேசவன், கே. பி. காமாகூஜி, பி. யு. சின்னப்பா, எம். எம் சிதம்பரநாதன் ஆகிய நடிக நடிகையர்களும்; கே. டி. நடராஜபிள்ளை, டி. எம். காதர் பாச்சா, கே. எஸ். தேவுடு ஐயர், எஸ். வி. வாசுதேவநாயர், ஏ எஸ். ராஜப்பா, எம் ஆர். வாசுவாம்பாள், எஸ் ஜி காசி ஐயர், எம். ஆர். கமல வேணி, எஸ். ஆர். ரமாமணிபாய் போன்ற ஆர்மோனியக் கலைஞர்களும், ஸ்பெஷல் நாடக மேடைகளில் தனிப்பாடல் களாகத் தேசீயப்பாடல்களை போலீஸ் அடக்குமுறைகளுக்கும் சிறைத் தண்டனைக்கும் கூடத் துணிந்து பாடிபாடித் தேசபக்தியை வளர்த்தார்கள். நூற்றுக்கணக்கான அந்தப் பாடல்களில் என் நினைவில் உள்ள சிலவற்றை அர்ைகுறை யாகச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.