பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஏக்கம் அகல அரசும்; பல்கலைக்கழகங்களும்; வானொலி, தொலைக் காட்சி, பண்பாட்டு மன்றங்கள் போன்ற அமைப் களும் நாடகக் கலையில் புதிய பொற்காலம் பிறக்க வழி கோலினால் கலைஞர்கள் உயர்வார்கள்; மக்கள் பயன்பெறுவ தோடு நல்லாதரவும் தருவார்கள். -

பன்னெடுங் காலமாகச் சாதிக்க முடியாத செயல்களைக் கூட மிகக் குறுகிய காலத்தில் நாடகங்கள் செயலாக்கும் என்று ஆசிரியர் சும்டிக்காட்டி நிலை நிறுத்தியுள்ளார். இது அனைவரும்-குறிப்பாக அரசியலில் உள்ளோர் ஊன்றிப் பார்த்துக் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்று என்று: கூறுவேன். இந்நாள் வருமானால் அது நாடகத் துறைக்குப் பொன்நாளாகும்.

அமெரிக்க அரசின் செய்தித் துறையில் கால் நூற்றாண்டு: பணியாற்றியவன் என்ற முறையில் இன்னொன்றும் கூறல் வேண்டும். இந்திய நாடகத்துறை வரலாறு பற்றி அறிய விரும்பும் மேலை நாட்டினருக்குக் குறிப்பாக, அமெரிக்கர் களுக்கு ஆங்கிலத்தில் நல்ல நூல் இல்லையென்ற குறை என் காதில் அடிக்கடி விழுந்ததுண்டு. கவிஞர் கு. சா. கி.யின் இந் நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுமானால் அக் குறை நீங்கும் என்பது உறுதி. மேலும், உலகமெலாம் தமிழ் நாடகக் கலை பற்றி அறிய அது சிறந்த வழியாகவும் அமையும். இயல், இசை நாடக மன்றம்போன்ற அமைப்புகள் இதனைச் செய்து உதவினால் தமிழகம் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்படும். நூல் ஆசிரியரும் தமது பணிக்கு. நல்ல கைமாறு கிடைத்ததென மகிழ்வார் என்பது திண்ணம்.

வ. உ. சி. சுப்பிரமணியம்