பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கவிஞர் கு. சா. கி.

ஆசை காட்டி மோசம் செய்யும் ஆட்சியை ஒழிக்கணும் நாம் அனைவரும் அகிம்சையென்னும் ஆயுதம் தரிக்கனும் தேசியக் கொடியின் கீழ்த் திரண்டுபோர் நடத்தனும் "ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் திக்கெட்டும்முழக்கனும்

(உத்திரவு) பாட்டி நூற்ற ராட்டைப் பூட்டி வீட்டிலுள்ளோர் நூற்கணும் பாழும் பரதேசித் துணிப் பைத்தியத்தைப் போக்கனும் தாட்டிகமாய்த் தேச சேவைத் தொண்டராய் இருக்கணும் "சலோடில்லி'மந்திரத்தைச் சகலரும் செபிக்க ஒலிக்கணும் சுத்தவீரத் தங்கம் சுபாஷ் சந்திரபோஸ் படைத்தளக் கர்த்தர் ஜாகவாஸ் தில் லான் சைகால் லகூழிமிபோல்-திட சித்தமாய்த் துப்பாக்கி அணுகுண்டையும் எதிர்க்கணும் "செய் அல்லது செத்துமடி' என்னும்மந்திரம் ஒலிக்கனும்

(உத்திரவு) அன்னியர்க்கு வால் பிடிக்கும் துரோகிகள் ஒழியனும் அதிகார வர்க்கத்தினர் ஆணவம் அழியனும் தன்னலம் கருதுகின்ற சண்டாளர்கள் மாளனும் தர்க்க வாதம் பேசும் மூடத் தடியர்களும் மறையனும் உத்திரவு போல் நடக்கணும்-காந்திஜியின் உபதேசத்தைக் கடைப்பிடிக்கனும் ஒரு கிராமியப் பாமரன் காந்தியடிகளைப் பற்றி வியந்து கூறுவதைப் போன்ற ஒரு பாடல்:

திரு ராஜா எஸ். எஸ். சண்முகதாஸ் எழுதியது.

காந்தியின்னு சொல்லி எங்கேயோ இருந்தொரு

கெழவர் வந்திருக்காராம்-அவரு காங்கிரசைச் சேர்ந்த ஆளாம் இப்பக்

கெவருமென்டையே எதுக்குராராம்-மல்லுக் கட்டக் கூடாதுன்னு ஊ ரையே ஒண்ணாக்கிக்

கலவரமும் பண்ணுராராம்

மகாத்மா-காந்தி