பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 119

வீட்டுக்கு ஒரு ராட்டினம் பூட்டி நூல் நூற்கத்தான் வேணு முன்னு சொல்லுறாராம்-வரி வேண்டாமுன்னு தடுக்கறாராம்-உண்ணா விரதங்களும் இருக்கிறாராம்-இன்னும் வேலையில்லாமல் அலைவோர்க்கெல்லாம் வேலை வேணு முன்னு கேட்கறாராம் - சீமைக்குப் போனாராம் ராசாவைக் கண்டாராம் செரிசெரியா உட்கார்ந்தாராம்-ஏதோ சேதிகளும் பேசினாராம்-பின்னே செயிலிலேயும் இருந்தாராம்-அதனால திருமால் அவதாரமேயுன்னுதான் இந்த தேசமெல்லாம் பெரும் பேராம்.

(உரை நடைச் சொல்லடைவு)

உச்சிக்குடுமியும் வச்சிக் கிட்டிருக்கிறாராம்! ஒச்சட்டையா கம்மெப் போலதான் இருப்பாராம்! நிச்சயம் சுயராச்சியம் வாங்கியே தருவாராம்! கெனைச்சதை முடிக்காம ஓயவே மாட்டாராம் கள்ளுக் கடையெல்லாம் கூடாதின்னுட்டாராம்! கதரு வேட்டியேதான் கட்டணுங்குறாராம்! பள்ளுப் பறையெல்லாம் ஒண்னுதாங்குறாராம் பந்தி போசனம் கூடப் பண்ணனுங்குறாராம்! கோயிலுக்குள்ளேயும் போகணுங்குறாராம்! கொச்சிராசா-இதைக் கூடாதுங்குறாராம்! திருவனந்தபுரம் ராசா சரிசொல்லிப் போட்டாராம்! சேலம் ராசாசிதான் இதுக்கு முன்னுக்கு நின்னாராம்

இன்னும் சத்தியமூர்த்தியாம், சாம்பமூர்த்தியாம் சவகர்லால் நேருவாம், சுபாஸ்சந்திரபோசுவாம், அவுங்களாம் இவுங்களாம் எல்லாரும்சேர்ந்துதான் இங்கிலீசு காரனை எதித்து கிக்கராங்களாம்!ஆமாம்

நெசமாத்தான் (காந்தி)