பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கவிஞர் கு. சா. கி.

இன்னும் யாராரோ பேர்களாம் இது நம்ம தேசமாம் இந்தியா வாசமாம் கனிவுறு சண்முகம் கவிபுகழ் நேசமாம் எங்கிட்டு பார்த்தாலும் ஜேஜேன்னு கோஷமாம் இப்பதான் கம்ம கொடி எங்கேயும் பறக்குதாம் இது வாஸ்தவமா காந்தி மகான்குத்திரமாம்! (காந்தி)

சிறைச் சாலையைத் துச்சமாக மதிக்கும் துணிவு வேண்டும் என்னும் கருத்தில் திரு. சுந்தரவாத்தியார் எழுதிய ஒரு பாடல்:

ராகம் : சிந்துபைரவி தாளம் : ஆதி.

செல்லுவோம் சிறைச்சாலை-மகாத்மா செப்பிய முறைபோல-இக்காலே-(செல்)

வெல்லுவோம் மதியாலே-சுயாட்சி வேண்டுமென் பதனாலே-இக்காளே-(செல்)

அன்னையின் கர்ப்பத்தில் ஈரைந்து மாதம் நாம் அடைபட் டிருக்கவில்லையோ? அதைவிடக் கஷ்டமோ அன்னியரின் சிறைக் கொடுமை ஆத்மாவை வென்று

விடுமோ? தாரணியில் இருட்டறையில் ராம தாசரும் சிறையிருந்தார்-நம்மைப் படைத்த பிரம்மனும் சிறையிருந்தார் பாண்டவர் முன்

பெரும் வனவாசம் புகுந்தார் அதனால் காமும்-(செல்)

அவனன்றி ஓரணுவும் அசையாதெனும் பெரிய ஆன்றோர்கள் உரையை மீறி அசைத்திடுமோ துப்பாக்கி குண்டு பீரங்கியெனும் ஆயுதப்படைகள் சீறி சந்தச் சரபகீதம்-ராஜா சண்முக தாசன் உரையே வேதம்-கன்கீதம் (செல்)