பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 121

கான்ஸ்டேபிள் என்ன எமனா-கம்மைத் தண்டிக்கக்

கலெக்டர் துரைதான் சிவனா-சும்மா மிரட்டும்

இன்ஸ்பெக்டர் தான் பிரம்மனா-போலீஸ் ரைட்டர்

என்ன சித்ரகுப்தனா-அஞ்சாமல் இன்றே (செல்)

தீண்டாமை இருக்கும்வரை நமக்கு விடுதலை கிடைக் காது என்ற காந்தியடிகளின் கருத்தை வலியுறுத்தும் ஒரு பாடல்:

தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவாருண்டோ தாங்குவாருண்டோ-அடிமை நீங்குதல் என்றேர (தாழ்)

வீழ்த்தப்பட்டு வாடுகின்றனர்.வெம்பியே திண்டாடுகின்றார் சூழ்ச்சி மனம் படைத்தவர்தம் சுயநலத்தாலேசுயநலத்தாலே-இந்த அவனியின்மேலே- (தாழ்)

பிஜித்தீவின் கரும்புத் தோட்டங்களிலே நம் தமிழ் நாட்டுப் பெண்கள் அல்லலுறும் அவல நிலையைப் பாரதியார் உள்ளம் உருகிப் பாடினார். அதைப் போல் இலங்கை முதலிய நாடுகளில் அல்லலுறும் தேயிலைத் தோம் டக் கூலிகளின் கொடுமை பற்றி திரு. சுந்தரவாத்தியார் பாடிய ஒரு பாடல்:

தேயிலைத் தோட்டத்திலே-பாரத

சேய்கள் சென்றுசென்று மாய்கின்றார் ஐயய்யோ

(தேயிலை)

ஓயாது நாள் முழுதும்-சதா ஊழியம் செய்து உடம்பலுத்தே கெட்ட நோயால் வருந்தும் மக்கள்-அங்கு கொங்து கொந்து தினம் நைந்து மடிகின்றார்

(தேயிலை) கட்டத் துணியுமின்றி கொடுங்

கானலிலே புள்ளிமானைப்போல் அலைந்து கட்டுவாக்காளி பூரான் பாம்பு

அட்டை கடித்து அலறிப் புலம்புறார்-(தேயிலை)