பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கவிஞர் கு. சா. கி.

காசாசைப்பேய் பிடித்த மட்டிக் கங்காணியர் சிறுமங்கையரைக் கெட்ட நேசத்திற்கே இழுத்துச் செய்யும் கிர்ப்பந்தம்தான் மனம் ஒப்பத் தகுந்தோ- (தேயிலை).

செந்தமிழ்ச் சுந்தரனார் இந்தச் சேதி உரைப்பதை ஆதரிப்பீர் பெரும் இந்து சகோதரரே!

இப்படி ஒரு பாடல் அக்கால நாடக மேடைகள் தோறும் முழங்கும். அடுத்து கைராட்டினத்தின் பெருமை குறித்து. மதுரை பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்.

ஆடு ராட்டே சுழன்றாடு ராட்டே-சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே- (ஆடு) காட்டுப் பருத்தியைக் கொட்டை நீக்கி-வெகு நாகரீகமான பஞ்சு தானுண்டாகி வீட்டுக்கு வீடு குறிக்கோளை நோக்கிச்-சுழற்றி விடுதலை காண்போமென் றாடு ராட்டே- (ஆடு)

ஆடுராட்டே சுழன்றாடு ராட்டே அகிம்சையே வெல்லுமென்று ஆடு ராட்டே (ஆடு)

நாம் அடிமைப்பட்டதற்கு ஜாதி, மத பேத உணர்வு களும், அவற்றின் விளைவாக நிலவிய ஒற்றுமையின்மையுமே காரணம் என்பதை விளங்கும் ஒரு பாடல்:

மதுரை பாஸ்கரதாஸ் இயற்றியது :

ஜாதி மதப்பேதச் சண்டை தானிப்பூமி சாசனமே சம்மதித்தெல்லோரும் ஒன்றாய்ச் சார்ந்திடில்

விமோசனமே. நீதி தெய்வம் ஒன்றே கினைப்பீர்கள் இன்றேநேசமில்லாமலே தேசமதை இழந்தோம் -(ஜாதி}