பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24. கவிஞர் கு. சா. கி.

கற்புடைய மாதர்களின் மேலே-விழக் கண்டோமே அங்கியகாட்டுச் சேலை-அவர் விர்ப்பனம் குறையும் அதனாலே-அதை விளங்கிக் கதர் உடுத்தல் மேலே -(சத்ய)

இந்திய தேசீயப் போராட்டத்தில் காந்தியடிகளுக்கு முன்பே பாஞ்சாலச்சிங்கம் என்று புகழ்பெற்றுப் பல்லாண்டுகள் சிறைப்பட்டவரும், ஒரு தேசீய எழுச்சி ஊர்வலத்தின் போது வெள்ளைச் சிப்பாய் ஒருவனின் துப்பாக்கிக் குதிரைத் தாக்குதலால் நோய்ப்பட்டு மடிந்தவருமாகிய லாலா லஜபதி ராயின மீது ஒரு பாடல்:

லாலா லஜபதி நாடெங்கும் புகழ்க் கிரிடாதிபதி

லாலா லஜபதி-நமது- (லாலா)

டிேய பாஞ்சால தேசத்திற்கே நல்ல நேத்திரம் போல் பிரகாசிப்பவர் ஈசன்முதலாக நீசன் வரையிலும் ாேசனைப்போல் உத்தேசிப்பவர்-நமது (லாலா)

மற்றொரு பாடல்:

பல்லவி மட்டுமே நினைவிலுள்ளது

தேசவிசுவாச லாலா லஜபதியேலாலா லஜபதியே

லஜபதிராயின் பிரலாபம்-என்னும் தலைப்பில் அமர கவி பாரதியார் எழுதிய பாடல் உங்களின் நினைவிலிருக்கு மென்று நம்புகிறேன். இப் பெரியார் அக்காலத்தில் அன்னி யரின் அடக்குமுறைக்கும் சிறைக் கொடுமைக்கும் ஆளாக்கப் பட்டதை அளவிம்டுச் சொல்ல முடியாது.

1919ம் ஆண்டு பாஞ்சாலத் தலைநகர் ஜாலியன் வாலா பாக் என்னும் நாற்புறமும் மதில்களால் சூழப்பட்ட ஒரு திடலுக்குள் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களை