பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுரை

டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் இயக்குநர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

முத்தமிழ் ஒன்றியம் -

"பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்த தமிழ் மூவாயிரம் ஆண்டு களுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பையுமுடைய உயர்தனிச் செம்மொழி! இம்மொழி இயல், இசை, நாடகம் என முப்பிரிவுகளைக் கொண்டுள்ளமையால் 'முத்தமிழ்’ எனக் குறிப்பிடுகிறோம். பிங்கல நிகண்டு,

"இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழென

வகைப்படச் சாற்றினர் மதியுணர்ந் தோரே'

என்று குறிப்பிடும். இலக்கியமும் இலக்கணமும் அடங்கியது இயற்றமிழ்; பண்ணொடு கூடிய பாடல்களையுடையது இசைத்தமிழ்: ஒரு கதையை அல்லது செயலை உரிய கதை மாந்தர்களைக் கொண்டும் உரையாடல்களை அமைத்தும் பாடல்களைப் பாடியும் மெய்ப்பாட்டுடன் பிறர்க்கு நடித்துக் காட்டுவது நாடகத் தமிழ். நாடகத்தில் இயலும், இசையும். இணைந்திருக்கக் காண்கிறோம். எனவே நாடகம் என்பது முத்தமிழும் பொருந்திய ஒன்றாகும். மனித உள்ளத் தில் தோன்றும் உணர்வுகளின் அடிப்படையில் உடல் அசைவு களிலிருந்து தோன்றிய நடனம் தொடர் நிகழ்ச்சி விளக்க