பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 169

(பாட்டு)

எப்பயன் விளைந்திடுமோ என்ன இனி நேர்ந்திடுமோ

என்றெண்ணி ஏங்குகின்றார்

நம் காந்திமகான்-(சிறைவாயில்)

காந்தியடிகள் சுதேசி இயக்கத்தின் பிரதான ஆயுதமாகப் பயன்படுத்திய ராட்டையைப் பற்றிப் பல பாடல்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் அடுத்துவரும் பாடல்:

இந்துஸ்தான் காப்பி-ஆதி:

நம்பிக்கைக் கொண்டெல்லோரும் கைராட்டைச் சுற்றுவோம் கைராட்டைச்சுற்றுவோம் சுய நாட்டைப் பற்றுவோம் தினம்

–(មយំ) ராணுவ பலம் நமக்கேது அதனாலே தினமும் தப்பாது - (நம்)

கடமிடும் எதிரிகள் அடியொடு மடிகுவர் நாளும் தப்பாது தினம் (நம்)

காந்தி முனிவர் திருவாக்கியம்-அதை கனவிலும் நினைவதே யோக்கியம்-திரு கங்கணம் அணிகுவீர் மங்கள பாஸ்கரன் சங்கீத பாக்கியம்-தினம் (நம்)

மற்றும் ஒரு இராட்டைப் பாடல் காப்பி-திஸ்ர ஆதி

ராட்டினமே காந்தி கைபாணம்-நாளும் நம்மைக் காக்கும் பிரமாணம்-சுதேசிய (ராட்டி)

நாட்டிற்கதர் வேலைச்சூட்டி நற் கங்கணம் நன்றாய்க் காட்டுவோம் தினம்-நாகரீக (ராட்டி)

த.-11