பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கவிஞர் கு. சா. கி.

போதெல்லாம் வந்தே மாதரம் என்னும் கோஷம் எதிரொலிக் கும். அன்றைய அன்னிய ஏகாதிபத்ய ஆட்சி வந்தே மாதரம் என்று கோஷிப்பதே தேசத் துரோகக் குற்றம் என்று பிரகட னம் செய்து, பல்லாண்டுகள் சிறைப் படுத்திச் சித்ரவதை செய்வது வழக்கமாயிருந்தது. அத்தகைய அடக்குமுறைக் கொடுமைகள் அமுலில் இருந்த அக்காலத்திலேயே, தேச பக்தி மிக்க நடிகர்கள் பலர், ஸ்பெஷல் நாடக மேடைகள் தோறும், வந்தேமாதரம் என்ற கோஷம் அமைந்த பல பாடல்களை, போலீசாரின் அடக்கு முறைக்கும் அஞ்சாமல் பாடிப் பொதுமக்களின் உள்ளங்களில் தேசபக்திக் கனலை மூட்டி வந்தனர் என்பது, நன்றியுள்ள தேசபக்தர்கள் என்றும் போற்றத் தக்கதாகும். அத்தகைய பாடல்களில் என் நினை வில் உள்ள இரண்டு பாடல்களை மட்டும் இங்கே எடுத்துச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

பாடல்-1 (மதுரை சுந்தர வாத்தியார் எழுதியது) 'வந்தே மாதரமே -வாழ்வுக்கோர் ஆதாரமே- (வந்) சந்தேக மில்லாமலே சார்வோம் சகோதரமே- (வந்) இந்து முஸ்லீம் கிருஸ்துவர்கள் என்னும் மதபதேமே இந்தியர்கள் ஒற்றுமையை மாய்த்திடும் அதேமே சந்ததம் சிந்தையில் வைத்தால் போதுமே--இதைச் சற்றேனும் மறந்தால் அபவாதமே எந்த நாளும் எல்லோரும் இணைந்தே சொல்லிப்பாரும் வந்த பின்னல்கள் தீரும் மனத்தில் இன்பம் சேரும்- (வங்) மந்திரமாகும் மகாத்மா காந்தியின் சொற் போதமே மாபெரும் சுதந்திரம் வழங்கிடும் நல்வேதமே சுந்தரத் தமிழின் சங்க நாதமே சுதந்திரம் வழங்கிடும் சங் கீதமே எந்த நாளும் எல்லோரும்