பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 177

இணைந்தே சொல்லிப் பாரும் வந்தயின்னல்கள் தீரும்-மனத்தில் இன்பம் சேரும் (வங்தே

பாடல் 2

வந்தே மாதரம் என்னுங்கள்-சுய ராஜ்யம் வந்ததென்று பாடி ஆடுங்கள் (வந்தே)

சந்தேகம் சற்று மின்றிச் சந்ததம் காந்தி சொற்படி சிங்தை துணிவுகொண்டு இந்தியரெல்லாம் திரண்டு

- (வந்தே) சந்தேகமான தொல்லை சற்றேனும் தேவையில்லை நம் தேசம் என்னும் எல்லை நம்மைவிட்டு மாறவில்லை

(வந்தே) எல்லோரும் ஒன்று சேரணும்-வெள்ளையனை எதிர்த்து விரட்டித் தீரணும்-இந்தியர்கள் -(எல்லோரும்) அல்லாகு அக்பரென்று சொல்லியே முழக்கனும் அன்னை பாரத நாட்டின் அடிமையை நீக்கணும்-(வங்தே)

(நடைச் சொல்)

குல்லா வைத்தாகணும் கொடி பறந்தாகணும் கூசா தெல்லோரும் கதர்க் கட்டியேதான் ஆகணும் கல்லாமை இல்லாமை இல்லா தொழிக்கணும் காங்கிரசில் சேர்ந்தே நம் கடமையைச் செய்யணும் (வங்தே

எல்லோரும் கூடி சமமாய் இருந்தே ஆகணும் ஏழைகளிடத்தினில் இரக்கம் வைத்தே ஆகனும் கல்லாத பேர்கள் கல்வி கற்றேதான் ஆகணும் கைதுக்கும் பொம்மைகளின் கதையை முடிக்கணும் அல்லாகு அக்பரென்று ஆனந்தக் கூத்தாடணும் அங்கங்கே காங்கிரஸ் ஆட்சி அமல் நடந்தாகணும் அங்கிய தேச உடைகள் அறவே ஒழியணும் ஆண்டான் அடிமையென்னும் பேதம் ஒழிந்தாகணும் வித்தியாசமெண்ணிடாமல் வேலைகள் செய்தாகணும்