பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கவிஞர் கு, சா. கி.

வீணில் காக்காய் பிடிக்கும் விதம் ஒழிந்தாகணும் சொல்லும் செயலும் ஒன்றாய் சுதந்திரமாகனும் சோதரர்களோடும் எல்லோர்க்கும் சொந்தம் இருந்தாகணும் சன்னியாசி காந்தித் தாத்தா சந்தோஷம் கொண்டாடனும்

-எல்லோம் தலைவர் ஜவஹர்லால் சந்தோஷமாகணும் (வங்) பல்லாயிரம் மக்களின் பசி தவிர்த்தாகனும் பாரினில் எல்லோரும் ராட்டைச் சுற்றியேதான்

- -ஆகணும் வேலை இல்லாக் கொடுமையெல்லாம் இல்லாமல் போகணும் இருதலைக் கொல்லி என்னும் நிலைமைகள் மாறணும் செல்லாத சாதிமுறை சீக்கிரம் ஒழியணும் செந்தமிழ் ஷண்முகக்கவி ஜெயக்கொடி நாட்டனும்-(வந்தே)

குறிப்பு :-தென்னாட்டுத் திலகரென்றும், கப்பலோட்டிய தமிழரென்றும் போற்றப்பெறும் திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு வந்தே மாதரம் பிள்ளை' என்பதே சிறப்புப் பெயராக அமைந்திருந்தது, சிந்தனைக்குரிய செய்தியாகும்.

தமிழ்நாட்டில் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன், எத்தனையோ நிரந்தர நாடகக் குழுக்கள் இருந்தன. என்றாலும், எண்ணிக்கையில் அவைகளைவிட அதிகமாக ஸ்பெஷல் நாடகங்களே அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். அவைகளிற் பெரும்பாலும் நந்தனார், கோவலன், வள்ளிதிருமணம் ஆகிய நாடகங்களே அதிகம். மேற்கண்ட நாடகங்களில் பாத்திரங்கள் மிகவும் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். நான் மேலே பாடிய பாடலில் மெட்டு, நந்தனார் நாடகத்தில் சிதம்பரம் போகாமல் இருப்பேனோ என்ற பாடலைத் தழுவியதாகும்.

அடுத்து அடிக்கடி நடைபெறும் வள்ளிதிருமணம் நாடகத்தில், வள்ளி நாயகியாக நடிக்கும் பெண் தினைப்