பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 179

புனக்காவல் செய்யும் காட்சியில் தினைப்பயிரைத் தின்ன வரும் பறவைகளைக் கையில் கவண் வைத்துக் கொண்டு ஆலோலம் பாடி விரட்டுவதாக அமையும் பாடலில் பறவை களை இழித்துப் பேசி விரட்டும் பாவனையில் எத்தனை லாவகமாக நம்மை அடிமைகொண்ட வெள்ளையர்களைப் பறவைகளுக்கு உவமை காட்டிப் பாடுவதன் மூலம் மக்களுக்கு சுதந்திரவேட்கையை மூட்டுகிறார் என்பதைப் பாருங்கள்.

ராகம்-சித்தரஞ்சனி தாளம்-திஸ்ர ஏகம் (வள்ளி ஆயலோட்டும் பாட்டு)

கொள்ளை வெள்ளைக் கொக்குகளா

வெகுநாளாய் இங்கிருந்து வெள்ளை யடித்தீர்களா ஆலோலங்கடிச் சோ-இனி கோபம் வரும் போய்விடுங்கள் ஆலோலங்கடிச்சோ காந்தி மகத்துவத்தால் கதிர்கள் விளைந்து இங்கே சாய்ந்து கிடக்குதென்று ஆலோலங்கடிச்சோ-இங்கே தட்டிப்பறிக்க வந்தீரோ ஆலோலங்கடிச்சோ இந்தியாவைக் கொள்ளையிடும் இங்கிலாந்துப்பட்சிகளா சொந்த நாட்டைத் தேடிப் போங்க ஆலோலங்கடிச்சோ

-இனியும் சுரண்டலைச் சகிக்க மாட்டோம் ஆலோலங்கடிச்சோ

இந்தப் பாடலின்மூலம் புராணகாலத்திய வள்ளி பறவைகளை மட்டும் விரட்டவில்லை, இந்திய நாட்டின் சுதந்திரத்தையும், செல்வத்தையும் கொள்ளையிட்டு வரும் வெள்ளையர் களையும் கவண்வீசி விரட்டுகிறாள். இது நாடக இலக்கணத் திற்குப் பொருந்துமா, என்றெல்லாம் அந்தக் கால நடிகர் களோ ரசிகர்களோ நினைப்பதில்லை. மாறாக சுதந்திர உணர்ச்சியின் காரணமாக, ரசிகர்கள், உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்து, மீண்டும் மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்பார்கள். இந்த உற்சாகம் நகைச்சுவை நடிகனுக்கும் ஏற்படும். அவன் வெள்ளையர்களுக்குத் துணையுபுரியும்