பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 183

தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு-அங்கு தின்ன உணவில்லாத கொக்கு-மது மாம்ச வெறிபிடித்த கொக்கு-நமது மக்களை ஏமாற்ற வந்த கொக்கு-வெள்ளைக் (கொக்கு) ஜாதியில் இழிந்தவர் என்ற காரணத்திற்காக, எந்த மயில் வாகனத்தில் அமரக்கூடாதென்று ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் தடுத்தார்களோ, அதே மயில்வாகனத்தில் சுப்ரமணியர் வேடத்தோடு அமர்ந்து பாடும்போதேசென்னை ராயல் தியேட்டரில் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் நாள் மாரடைப்பினால் அந்தப் புனித தேசபக்தரின் ஆவி பிரிந்தது. மறுநாள் அதே முருகன் வேடத்தோடு அதே மயில் வாகனத்தில் அலங்கரித்து அமர்த்தி ஊர்வலமாகச் சென்ற போது, கே.பி. சுந்தராம்பாள், கே. எஸ். அனந்தநாராயண ஐயர் போன்ற பல நூறு நடிக நடிகயைர்களும், சத்திய மூர்த்தி ஐயர் போன்ற தலைவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நாடகமேடைகளில் தேசீயப்பாடல்களைப் பாடுவதைப் போல் நாடகத்தில் வரும் பாத்திரங்களும்கூடச் சில பாடல்களைப் பாடுவார்கள். பார்ஸி கோவலன், சங்கீதக் கோவலன், தேசீயக் கோவலன் என்றெல்லாம் நடிகர்களின் திறத்திற்கேற்ப விளம்பரம் செய்வார்கள். அதற்குத் தக்க வாறு நாடகம் காட்சிச் சிறப்பும் சங்கீதச்சிறப்பும், தேசீயச் சிறப்பும் மிக்கதாக அமையும். தேசீயக் கோவலன் என்று விளம்பரம் செய்வோர் கதர் உடைகளைத் தரித்து, சமயத் திற்கேற்ற முறையில் தேசீயவிடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் உரையாடல்களும் பாடல்களும் இருக்கும். இதோ சான்றுக்கு ஒரு பாடல்.

மாதவி பாட்டு-செஞ்சுருட்டி; மிஸ்ரஏகம் வாங்கித்தரவேண்டும் எனதாசை மணவாளரே (வாங்) பரதேச உடைநீக்கி பாரதமக்களைக் காக்க-நமது பாட்டி நூற்ற ராட்டின் நூலில் பேட்டுப் போட்ட சீட்டி வாங்கித் (தர)