பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

கோவையில் அவர் அளித்துள்ளார். படிப்பறிவினால் அன்றிப் பட்டறிவினால் பெறப்படுகின்ற செய்திகளாதலின் அவை உயிர்ப்புடன் விளங்குகின்றன. இதை அவரே, 'நடிகனாகவும், நாடக ஆசிரியனாகவும், பாடலாசிரியனா கவும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு சில புதிய தகவல்களைத் தரமுடியும் என்ற நம்பிக்கையுடன் உரையைத் தொடங்குகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடகம்

'நாடகம் நாட்டிற்கு அணிகலன்; நாகரிகத்தின் அளவு கோல்; நாட்டின் படப்பிடிப்பு; பாமரர்களின் பல்கலைக் கழகம்...' எனப் பலவாறாக அவர் அடுக்கிச் சொல்வதிலி ருந்து அவருக்கு நாடகத்தின்பால் உள்ள ஈடுபாட்டை நாம் நன்குணர்கிறோம். நாடகம் என்ற சொல்லை நாடு+அகம் எனப் பிரித்து நாட்டின் நிலையைத் தன் அகத்தே பிரதிபலித் துக் காட்டுவது; நாட்டின் இதயமாக (அகமாக) விளங்குவது: அகம் நாடுவது எனப் பொருள் விளக்கம் தந்திருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. நாடகத்தைக் குறிக்கப் பிறமொழிகளில் உள்ள சொற்களான Play, Drama - என்பவற்றைவிட நாடகம் என்ற சொல் எத்தகைய பொருள் பொதிந்தது. என்பதையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்.

நாடகத்தில் அடங்குபவை

நாட்டியம் நாடகத்தின் ஒரு பகுதியே; நாடகமும் நாட்டியமும் கூத்து என்ற பொதுப் பெயரால் அழைக்கப் படுகின்றன என்பதற்குச் சான்றுகள் தந்துள்ளார். மேலும் 'பாடியும் ஆடியும், நவரச பாவ பேதங்களுக்கு ஏற்பவும், கதையில் வரும் பாத்திரங்கட்கேற்பவும் பேசியும் நடித்துக் காட்டியும், கதையை நடத்திக் காட்டும் கதாகாலட்சேப நிகழ்ச்சிகளையும் நாடகத்தின் ஒரு கூறாகவே கருதுகிறேன்' என்கிறார். அதுபோன்றே கிராமப் புறங்களில் விழாக்காலங்