பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 189

கன்னடத்தில் நாடகம்

மராத்தி, இந்தி, வங்கம், ஆந்திரம் போன்று, கன்னட மாநிலத்தில் நாடகம் தீவிர வளர்ச்சியடையாது போயினும், பரவலாக ஆங்காங்கு சிறுசிறு குழுக்களாகப் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளே நாடகமாக நடிக்கப் பெற்றன. இவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்பெறும் நாடக சபைகள் சிராட்டி வெங்கோபராவ் கம்பெனி, ராகவேந்திரராவ் கம்பெனி, குப்பி வீரண்ணா கம்பெனி ஆகியவையாகும்.

குப்பி வீரண்ணா அவர்களின் நாடகக்குழு சென்ற 1930, 31ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பல வற்றில் நாடகங்கள் நடத்தினார்கள். கும்பகோணத்தில் மகா மகத் திருவிழாவின்போது கன்னையா கம்பெனி, சீனிவாச பிள்ளை கம்பெனி, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, குப்பி வீரண்ணாகம்பெனி, இவற்றிற்கிடையே பல ஸ்பெஷல் நாடகக்குழுவினர்கள், இப்படி எங்கு பார்த்தாலும் ஒரே நாடக மயமாக இருந்தன. அப்போது நான் குப்பிவிரண்ணா அவர்களின் நாடகங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக சதாரம் நாடகம். இங்கே திருடன் வேடம் வேறு முறையில் பிரபலமாக இருந்ததால் குப்பி சதாரம் எடுபட வில்லை. மற்றும் தமிழ் நாடகங்களின் வளர்ச்சி மிகமிக உச்ச நிலையில் இருந்ததால் குப்பி கம்பெனியாரின் நாடகங்கள் தோல்வியையே கண்டன என்று கூறலாம். 1940ம் ஆண்டு வாகில் தஞ்சையில் திரு. பி. ஆர். பத்துலு அவர்கள் சில நண்பர்களுடன் கன்னட நாடகக்குழு ஒன்றைத் தொடங்கிப் பல புராணநாடகங்களையும், சம்சார நெளகா என்ற சமூக நாடகத்தையும் நடத்தினார். இந்தக் குழுவில் கே. ஏ. சொக்க லிங்க பாகவதர் என்ற ஒரு பிரபல பாடகர் முக்கிய நடிகர் களில் ஒருவராயிருந்தார். இந்தக் குழுவும் நீண்டநாள் நடைபெறமுடியாமல் விரைவில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் நமது நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் கன்னட நாட்டில் மூன்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நாடகம் நடித்து வெற்றிக்கொடி நாட்டினர் என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும்.