பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கவிஞர் கு. சா. கி.

உதாரணத்திற்குச் சிலரைமட்டும் சொல்கிறேன், இசக்கிமுத்துவாத்தியார், ஆதிமூலம் வாத்தியார், சுந்தர வாத்தியார், மாரியப்ப சுவாமிகள், சி. கன்னையா, எம்.ஆர். ராதா, எம்.எஸ். முத்துக்கிருஷ்ணன், டி. பாலசுப்ர மணியம், பி. டி. சம்பந்தம், கே. சாரங்கபாணி, டி. கே. எஸ். சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம், கே. பி. காமாட்சி, எஸ். ஜி. கிட்டப்பா சகோதரர்கள், கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, எம். ஜி சக்ரபாணி, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி, எஸ்.வி. சுப்பையா, எஸ்.வி. சகஸ்ரநாமம். காளி, என். ரத்தினம், என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். பாலையா, ஏ.பி நாகராஜன், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் என்று இன்னும் எத்தனையோ பேர்களைச் சொல்லலாம். இந்தப் பட்டியலில், எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையை யும், என்னையும்கூடச் சேர்த்துக்கொள்ளலாம். ஆம்: நானும் மூன்றாம் வகுப்பு முற்றுப் பெறுவதற்கு முன்பே ஒன்பதாவது வயதிலேயே நாடகக்குழுவில் சேர்ந்தவன்தான்.

பனிரண்டு வயதில் ஒரு சாதாரண நடிகனாகச் சேர்ந்த இ. கன்னையா அவர்கள், பிற்காலத்தில் நாடக உலகில் எத்தகைய புரட்சிகளையெல்லாம் செய்தார்? படி அரிசி இரண்டனா விற்ற அக்காலத்தில், அவருடைய நாடகங் களுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்வரை வசூலாகும். மின்சார வசதியே இல்லாத அக்காலத்தில், ஜெனரேட்டர் வைத்து மேடையில் வண்ண ஒளி ஜாலங்களைச் செய்து காட்டினார். காட்சி அமைப்புக்கும் உடையலங்காரங் களுக்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டார். எங்கோ ஒரு ஊரில் நடக்கும் நாடகத்திற்குத் தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் செய்தார். ஒவியருக்கு ஆயிரக் கணக்கில் ஊதியம். இசையமைப்பாளருக்கும் அப்படியே - இதற்கெல்லாம் பம்பாயிலிருந்து மிகச்சிறந்த மேதைகளை அழைத்து வந்து வைத்திருந்தார். இவர் நடத்திய ஆண்டாள், தசாவதாரம், ராமாயணம், பகவத்கீதை