பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 193

ஆகிய நாடகங்களைக் காணப் பல மாவட்டங்களிலிருந்தும்' பிற மாநிலங்களில் இருந்தும்கூட ரசிகப் பெருமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். டிக்கெட் கிடைக்கா விட்டாலும், நாட்கணக்கில் காத்திருந்து நாடகம் பார்த் தனர். திரு கன்னையா அவர்களின் வெற்றிக்கு ஏகை சிவசண்முகம் பிள்ளை அவர்களின் ஜீவனுள்ள பாடல்களும். எஸ். ஜி. கிட்டப்பா, எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ், சந்தானம். பி. பி. ரங்காச்சாரி, சி. வி. வி பந்துலு ஆகிய இசை மேதைகளின் சங்கீதத்திறனும் பெரிய அளவில் துணை புரிந்தன.

பூரீவில்லிபுத்தூர், திருக்கண்ணபுரம், நாச்சியார்கோவில், குடந்தை சாரங்கபாணி கோவில், திருப்பதி, திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில், ரீபெரும்புதூர், மற்றும் பல கோயில்களுக்கு இவர் செய்த தர்மமே சுமார் இருபது லட்சம் இருக்குமென்று அந்தக் காலத்திலேயே சொல்லுவா: கள். இனி இத்தகைய புரட்சியை யாரால் செய்து காட்ட முடியும்? கன்னையாவுக்கு இணை கன்னையாவே!

பெண் வேடத்திற் சிறந்த ஆண் நடிகர்கள்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அதற்குப் பின்பும் தமிழ் நாடக மேடையில் பெண் பாத்திரங்களைச்

சிறப்பாகத் தாங்கி நடித்து, ஆண் நடிகர்கள் பலர் புகழ் பெற்று விளங்கினர்!

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மணச்சநல்லூர் ராமுடுஐயர், தஞ்சை வேணுகோபாலையர், தஞ்சைசுந்தர் ராவ், குப்பண்ணராவ், கவாய் மாணிக்கம்பிள்ளை, கே. 母· நடராஜபிள்ளை, அல்லி பரமேஸ்வரஐயர், வள்ளிவைத்திய நாதய்யர், எம். எஸ். தண்டபாணிபிள்ளை, புல்ரோஸ் பால சுந்தரம் செட்டியார், ராமையாபாகவதர், புதுவை வண்ணக் களஞ்சியம் வி. ஆர். ரெத்தினசாமி நாயுடு, மனமோகன அரங்கசாமி நாயுடு, அல்லி ஆறுமுகம் சேர்வை,