பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 197

ஆண்வேடம் தாங்கி நடித்துப் பெயர் பெற்ற சிறந்த பெண் நடிகைகள்

பெண் வேடம் தாங்கி நடித்த சிறந்த ஆண் நடிகர் களைப்பற்றி முன்பே கூறியுள்ளேன். அதைப் போலவே மிகச் சிறப்பாக ஆண்வேடம் தாங்கிப் புகழ் பெற்ற பெண் நடிகை களும் அக்காலத்தில் பலர் இருந்திருக்கின்றனர்.

இவர்களில் மிகச் சிறந்தவர்கள்-வி. பி. ஜானகி அம்மாள், கும்பகோணம் ராஜாமணி அம்மாள், டி. டி. தாயம் மாள், தாணுவாம்பாள், பி. ராஜாம்பாள், எஸ்.ஆர். ஜானகி எஸ்.என். விஜயலக்ஷ்மி, டி. எஸ். வேலம்மாள், கே. பி. சுந்த ராம்பாள், என். எம். சுந்தராம்பாள் மற்றும் எத்தனையோ பேர்களைச் சொல்லலாம்.

மனோகரா நாடகத்தில் சங்கிலியை அறுத்துக் கொண்டு உருவிய உடைவாளை வீசிச்சுழற்றியபடி, தன் தந்தையையே கொல்லச் சீறிப்பாயும் வீராவேசமான கட்டத்தில் பி. ராஜாம்பாள் அவர்களின் சிறந்தநடிப்பை இன்று நினைத் தாலும், என் உடலும் உள்ளமும் சிலிர்ப்பதை உணருகின் றேன். திருமதி எஸ்.ஆர். ஜானகி அவர்கள், ராஜபார்ட் உடையணிந்து மேடையில் தோன்றும் மிடுக்கு நடையைக் கண்டே மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதை எத் தைையோ முறை கண்டிருக்கின்றேன்.

மற்றுமோர் அருமையான நிகழ்ச்சி, சுமார் நாற்பத் தைந்து ஆண்டுகளுக்கு முன் குடந்தையில் நடந்தது கே.பி. சுந்தராம்பாள் வேலன், வேடன், விருத்தனாகவும், எஸ்.ஜி. கிட்டப்பா அவர்கள் பூரீவள்ளியாகவும் நடித்தார்கள். இருவருக்கும் உள்ள உறவும் ஊடலும் ரசிகர்கள் அனைவருக் கும் தெரியும். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு