பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

களில் பம்பை, உடுக்கை முழங்க, சிலம்பு ஒலிக்கப் பெண்கள் மிகுந்த ஆவேசங் கொண்டு கூச்சலிட்டு ஆடுவதும் ஒரு வகை. நாடக அங்கமே. கிராமக் கலைகளில் இன்றும் உயிர்ப்போடு

விளங்கும் கும்மி, கோலாட்டம், கரகம், காவடியாட்டம்,

ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரையாட்டம்,

ஆகிய கலைகள் எல்லாம் ஒருவகை நாடக அங்கம் என்றே

கொள்ள வேண்டும். இவ்வாறு ஆசிரியர் 'நாடகம்' என்ற சொல்லுக்குப் பரந்த அளவில் பொருள் கொண்டு ஆய்வு

செய்துள்ளார்.

முக்காலம்

நாடகத்திற்குப் பொருளும், நாடகத்துள் அடங்குபவை எவையெவை என்றும் விளக்கியவர், அதனை முற்காலம், இடைக்காலம், இக்காலம் என மூன்று பிரிவுகளாகக்கொண்டு. அந்தந்தக் காலத்தில் நாடகத்தின் அமைப்பு, அவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றைத் தக்க சான்றுகளுடன் விளக்கிச் செல்கிறார்.

முற்காலம்

நூலாசிரியர் அகத்தியம் முதல் சிலப்பதிகாரம் வரையுள்ள காலத்தை நாடகக் கலையின் முற்காலமாகக் கொள்கிறார்.

'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்'

எனத் தொல்காப்பியம் கூறுவதால் தொல் காப்பியர் காலத் திலேயே நாடகம் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை

அறிகிறோம். ஒருவரிடம் செல்வம் வந்து சேர்வதானது

கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது. அது

நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றதாகும் என்பதை,

  • கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிங் தற்று'