பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கவிஞர் கு. சா. கி.

'ாடுவதும், பேசுவதும், ஒருவரை ஒருவர் சீண்டுவதும் ரசிகர்களை ஆனந்த சாகரத்தில்ஆழ்த்தி, வினாடிக்கு வினாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வைத்தது. இத்தகைய இனிய அற்புதக் காட்சிகளையெல்லாம் இனி எங்கே காணப் போகின்றோம்.

ஜெகநாதய்யரின் மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபா

தாப்பா வெங்கடாஜல பாகவதரின் நாடகக்குழு இரண் டாக உடைந்ததும், அதில் ஒரு பிரிவு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற பெயரில் அமையப் பெற்றது என் பதையும் முன்பு கூறினேன். இதன் மற்றொரு குழுவை திரு. சச்சிதானந்தம் பிள்ளையின் மற்றக் கூட்டாளிகளாகிய நான்கு பேர்களின் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு, அக்குழு விற்கு மதுரை பால மீன ரஞ்சனி சங்கீதசபா என்று பெயர் குட்டி, திரு. ஜெகந்நாதஐயர் அவர்களை மேனேஜராக வைத்து நடத்திவந்தனர். இதன் பங்குதாரர்கள் அனைவரும் மதுரையில் பிரபல வியாபாரிகள். ஆகையால், நாடகக் கம்பெனி நிர்வாகத்தை நேரிடையாகக் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் மேலும் மேலும் நஷ்டம் வரக்கூடுமோ என்ற பயத்தின் காரணமாக மேனேஜராக இருந்த ஜகந்நா தய்யர் அவர்களையே கம்பெனியின் பூரண உரிமையாளராக இருக்க அனுமதித்துவிட்டு, உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற நிலையில் மேற்கண்ட தால்வரும் ஒதுங்கி விட்டனர்.

நிர்வாகத் திறமையும், பொது அறிவும், உலக அனுபவ மும், ஆங்கிலப் புலமையும், சட்ட நுணுக்கமும் தேர்ந்த திரு. பி. ஜெகன்னாதய்யர் அவர்களின் தீவிர முயற்சியும், ஓயாத உழைப்பும் கம்பெனியை மிகக் குறுகிய காலத்தி லேயே மிக உன்னத நிலைக்கு உயர்த்தியது.

அக்காலத்தில மிகப்பிரபலமாக விளங்கிய சி. கன்னையா கம்பெனி, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, ஆரியகான