பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 199

சபா, பி. எஸ். வேலுநாயரின் சண்முகானந்தசபா ஆகியவற் றுடன் போட்டி போட்டுச் சமநிலையில் நிற்கும் அளவுக்குச் சிறந்த நாடகங்களையும் நடிகர்களையும் உருவாக்கினார். சங்கரதாஸ் சுவாமிகளிடம் நன்கு பயிற்சி பெற்ற பல மாண வர்களைச் சேர்த்து அவர்களின் அனுபவ முதிர்ச்சிகளையெல் லாம் பயன்படுத்திக்கொண்டார். பிற்காலத்தில் மிகச் சிறந்த புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய எம்.ஆர். ராதா, டி. பாலசுப்ரமணியம், எம். எஸ். முத்துகிருஷ்ணன், பி.டி. சம்பந்தம், எதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை, லட்சுமிபதி, எத்திராஜுலு, எஸ். எஸ். சாப்ஜான், எஸ். என். ராமய்யா, கே. சாரங்கபாணி, நவாப் ராஜமாணிக்கம், சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன், எஸ். வி. வெங்கட்ராமன் , எம். ஆர் . சுவாமிநாதன், எம். கே. ராதா, நம்மாழ்வார் என்னும் எண் ணற்ற கலைஞர்கள் ஐயர் கம்பெனியை அலங்கரித்தவர் களாவர். திரு. எம். கந்தசாமி முதலியார் அவர்களும் பல ஆண்டுகள் இக்கம்பெனியில் ஆசிரியராயிருந்து பல சமுக நாடகங்களை உருவாக்கி வெற்றி தேடித் தந்தார்.

1980-ம் ஆண்டு இக்கம்பெனியிலிருந்து நவாப் ராஜ மாணிக்கம், கே. சாரங்கபாணி, ஏ.எம். மருதப்பா போன்ற சில நடிகர்களைப்பிரித்து பக்கிரிராஜா என்பார் ஒருநிறுவனத் தைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்தி வந்தார். பிறகு இந்த நிறுவனமும் செயலிழந்துபோன நிலையில் நவாப்ராஜ மாணிக்கம், கே சாாங்கபாணி, எ. எம். மருதப்பா, ஓவியர் மாதவன் பிள்ளை ஆகியோருடன் மற்றுப் சில நடிகர்களைச் சேர்த்து, பதினோரு பேர்களின் கூட்டும் பொறுப்பில் 1933-ல் மதுரை தேவி பாலவினோத சங்கீத சபா என்னும் நிறுவனத் தைத் தொடங்கினார்கள் .

ஆனால் இக் கூட்டுப் பொறுப்பு மிகக்குறுகிய காலத்திற் குள்ளேயே பிசுபிசுத்துப் போய், குழுவின் பூரண உரிமை யாளர் பொறுப்பையும் நவாப் ராஜமாணிக்கம் அவர்களே ஏற்றுக் கொண்டு பல ஆண்டுகள் மிக வெற்றிகரமாகப்