பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கவிஞர் கு. சா. கி.

புதுப்புது நாடகங்களை அரங்கேற்றிப் புகழும் பொருளும் தேடினார் பக்த ராமதாஸ், கிருஷ்ண லீலா, சக்தி லீலா, ராமாயணம், தசாவதாரம், குமாரவிஜயம், சபரிமலை ஐயப்பன், ஏசுநாதர் போன்ற புராண இதிகாச நாடகங் களையும், இன்பசாகரன், துர்க்கேசநந்தினி, பிரேமகுமாரி போன்ற தேசீய சமுக நாடகங்களையும் மிகச் சிறப்பாக நடத்திப் புகழ்பெற்றார்.

பக்த ராமதாஸ் திரைப்படத்திற்கு நடிகர் பொறுப்புக் கான ஒப்பந்தத்தையும் தானே ஏற்றுக்கொண்டு படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதைவிடச் சிறப் பான ஒன்று இவர் கன்னட நாட்டிலும் மலையாள நாட்டி லும் தமிழ்நாடகத்தைப் பல ஆண்டுகள் நடத்திப் பிற மொழி நாடகம் என்ற வேற்றுமையே இல்லாது அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

1934-ம் ஆண்டு கோவை வெரைட்டி ஹாலில் காந்தியடி களின் முன்னிலையில் நந்தனார் நாடகத்தை நடத்திக் காட்டி அரிஜன நிதிக்கு அன்றைய வசூல் ரூ. 3,000த்தை வழங்கி அடிகளாரின் ஆசி பெற்றது பெறுதற்குரிய பேறாகும்.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும்சுவாமிகளின் கோவலன் நாடகமும்

தமிழ் இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், அரசியல், காதல், வீரம், வாழ்க்கைமுறை எல்லைகள் ஆகிய அனைத்தையும் பிரதிபலித்துக் காட்டும் காலக் கண்ணாடி யாகவும், வரலாற்றுக் கருவூலமாகவும் விளங்கும் ஒப்பற்ற காவியம் சிலப்பதிகாரம் என்பதில் கருத்து வேற்றுமைக்கே இடமிருக்க முடியாது. அதன் சிறப்பைச் சிதைக்கும் சிறுமைச் செயல் எங்கு நிகழ்ந்தாலும், அதற்கு யார் காரண மானாலும், அதைக் கண்டிக்க வேண்டியது அவசியம் என்ப தில் எனக்கும் உடன்பாடு உண்டு.