பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 201

ஆனால் சுவாமிகள் கோவலன் நாடகத்தை எழுதியதின் மூலம், சிலப்பதிகாரத்தைச் சிதைத்துவிட்டார் என்ற எண்ணம் பல அறிஞர்களிடையே நீண்ட நெடுங்காலமாய் இருப்பதை நான் அறிவேன். இது தவறான மதிப்பீடு என் பதே எனது தாழ்மையான கருத்து.

இந்த எண்ணம் எழுந்ததற்கே காரணம் நாலாந்தரமான நடிகர்களின் தெருக் கூத்துபோன்ற நாடகங்களைப் பார்த்த தின் விளைவாகவே தோன்றியிருத்தல் வேண்டும்.

கட்டுக் கோப்பான சிறந்த நிரந்தர நாடகக் குழுவினர் கள், அக்காலத்தில் நடத்திய கோவலன் நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு, இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கவே முடியாது.

அல்லி அரசாணிமாலை, பவழக்கொடிமாலை, அபிமன்யு சுந்தரி மாலை, புலந்திரன் களவு , காத்தவராயன் கதை, என் றெல்லாம் பாமர ரஞ்சகமாய், அகவற்பா நடையில் எந்தப் புண்ணியவானோ பல கதைகளை எழுதி, அவற்றையெல்லாம் புகழேந்திப் புலவரின் பெயரால் வெளியிட்டதைப் போல், அக் காலத்தில் இந்தக் கோவலன்-கண்ணகி கதையும் பிரபல மாகியிருந்தது.

அதையே ஆதாரமாகக் கொண்டு, பல்வேறு நாடகக் குழுவினர் சுவாமிகளின் காலத்திற்கு முன்பே இங்கு கோவ லன் நாடகத்தை மனம்போன போக்கில் தரக் குறைவாக நடித்து வந்திருக்கின்றனர்.

கோவலன் நாடகம் முதற் பாகம் இரண்டாம் பாகம் என்று இரண்டுநாள் நடத்தி வந்தனர்.

அதன் பிறகு பல நாடகக் குழுவினர்களின் வேண்டு கோளுக்கிணங்க, சங்க இலக்கியங்கள் முதல் சகல இலக் கணங்களையும் கசடறக் கற்றுத் தேர்ந்த புலமைப் பெருங் கடலாகிய சங்கரதாஸ் சுவாமிகள், மேற்கண்ட குறைகளை யெல்லாம் நீக்கி, சிலப்பதிகார மூலக்கதையின் கருப் பொருளுக்கு எந்தவித ஊறும் நேராத வகையிலும்

த. நா-13