பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கவிஞர் கு.சா.கி.

அடுத்துக் கானல்வரிப் பாடலில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக, மாதவியின் கற்பொழுக்கத்தி லேயே சந்தேகம் கொண்டு, கோவலன் அவளை வெறுத்துப் பிரிவதாகச் சிலம்பு கூறுகிறது.

ஆனால் சுவாமிகளின் நாடகக் கோவலனோ, மாதவியின் பால் எத்தனை மயக்கம் கொண்டிருந்தாலும், கண்ணகியின் கடிதம் கண்டவுடன், அவளைக் காணத் துடிக்கும் மனப் போக்கிலே கடமை உணர்ச்சி மிகுந்தவனாகக் காணப்படு கின்றான். ஆம் நாடகக் கோவலன் தொடக்கம் முதல் இறுதிவரை காதலுக்கும் கடமைக்கும் இடையே போராடும் பாத்திரமாகவே படைக்கப்பட்டிருப்பதைக் காணுகின்றோம்.

இதைப்போலவே மாதவியின் பாத்திரமும் மாண்புடைய தாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது நாடகத்தில்.

ஆம், கணிகையர் வாழ்க்கை கடையே’ என்றும், காம விருந்தின் மடவார்’ என்றும், முறைமையின் வாழா அத் தாக்கணங்கனையார்' என்றும் சிலம்பு கூறும் சிறுமைச் செயல்களுக்கும்

பொருட் பெண்டிர், மாய மகளிர், இருமனப் பெண்டிர், அன்பின் விழையார், பொருள் விழையும் ஆய் தொடியார், என்றெல்லாம் வரைவின் மகளிர்பற்றி வரம்பிட்டுக்கூறும் வள்ளுவப் பெருமானின் கூற்றுக்கும் மாறாகத் தான் வீசிய தெய்வீக மாலையின் மூலம் தனக்குரிமையாகிவிட்ட கோவலனையே மாதவி தனது கொழுநனாகக்கொண்டு குலக் கொடியிலும் மேலாக அன்பு செலுத்தக் கானுகின்றோம்.

மேலும் கண்ணகியின் கடிதம் கண்டு தன்னைவிட்டுப் பிரிய நினைக்கும் கோவலனின் பிரிவைச் சகிக்க முடியாத வளாகத்தான், மனித சக்திக்கு மீறிய நிபந்தனைகளைப் போட்டு, அவனைத் தடுத்து நிறுத்த முயற்சித்தும் முடியாத