பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 207

நிலையில்தான், கோவலனைப் பிரிகின்றாள். ஆனால் அந்தப் பிரிவை நிரந்தரமாக்கிவிட்ட அந்தக் கலையரசியின் பரிதாபத்திற்குரிய நிலை, நம் மனத்திலும் வேதனையை உண்டாக்கி விடுகின்றது.

அடுத்துக் காவியத் தலைவியும் கற்புத் தெய்வமுமாகிய கண்ணகிதேவியின் பாத்திரப் படைப்பிலே சுவாமிகள் செய் துள்ள மாற்றம் புனிதத்தின் சிகரத்தையே எட்டுவதாக அமைந்துள்ளது, போற்றிப் புகழத்தக்க அம்சமாகும்.

இறைவனின் திருவருளால் ஆற்றுவெள்ளத்தில் கிடைத்த அயோனிதையாக அறிமுகமாகும் கண்ணகி, சிலப்பதிகாரத் தில் திருமணத்தில் அறிமுகமாகிப் பின் பல்லாண்டுகள் கோவலனுடன் இன்பம் துய்த்ததாகச் சொல்லப்படுவது பால் அல்லாமல், பின்னே தெய்வமாகப் போகும் கண்ணகியைக் காமக்களியாடல்களில் ஈடுபடுத்திக் களங்கப்படுத்த விருப்ப மற்றவராய், குழந்தை மணம் நிகழ்ந்ததாகக் கற்பித்து, தெய்வீகப் புனிதத்தை நிலை நிறுத்துவதுடன், அந்தத் தெய்வீக சக்தியால் கோவலனிடம் மாதவி கேட்கும் தங்கப் பதுமையைத் தோற்றுவித்தும், பிறகு பதுமையைப் பேச வைத்தும், பின்பு எரித்து மறைத்தும், அதன்பின் மதுரை செல்லும் வழியில் கள்வர்களைக் கற்சிலையாக்கியும், இறுதி யில் பாண்டியன் அவையில் களவுபோன சிலம்பைக் கவர்ந்து சென்ற கருடனையே கொண்டு வரச் செய்தும், நிகழ்த்தும் அற்புதங்களின் மூலம் கண்ணகியின் கற்பின் திறமும், கடவுள் தன்மையும் எந்த அளவுக்கு உயர்த்தப் பெற்றிருக்கின்றது. இதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படுத்தும் ஒரு பாமரப் பிரமிப்பும் நாடகப் பாங்கும் கலைஞர்கள் என்றென்றும் எண்ணி எண்ணி மகிழத்தக்க அம்சங்களாகும்.

அடுத்துப் பாண்டியனின் பாத்திரப் படைப்பிலே சுவாமி கள் செய்துள்ள மாற்றமும் போற்றத்தக்க அம்சமாகும். சிலப்பதிகாரப் பாண்டியன் தன் அரசவையிலே நடைபெறும்