பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

எனத் திருக்குறள் குறிப்பிடும். விழாவின் கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல மக்கள் அவையிடையே தோன்றி, இயங்கி, துறந்து போகும் இயல்புடையது இவ்: வுலகம் என்ற கருத்தைச் சோழன் நலங்கிள்ளியின்,

‘‘...... விழவில்

கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இவ் வுலகம்'

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் தெரிவிக்கும். இவற்றால் பண்டைய நாடகங்களில் பலர் பல்வேறு கோலம் புனைந்து

நடித்ததையும், மக்கள் கூடி அந்நாடகங்களைக் கண்டு

சென்றதையும் நாம் அறிய முடிகிறது. சிலம்பில் காணப் படும் நாடகமேடை அமைப்புமுறை 15 ஆம் நூற்றாண்டு

வரையிலும் கூட ஆங்கில நாட்டு மேதைகள் காணாத புதுமை, யாகும்' என்பதை ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

இவற்றால் பண்டைய நாட்களில் நாடகம் பெற்றிருந்த, உயர்வு நன்கு புலனாகிறது.

இடைக்காலம்

அத்தகைய பண்டைய நாடக இலக்கியங்கள் எங்கே? என்ற வினாவை எழுப்பி, அவை அழிந்ததற்குக் காரணம் வேற்றினத்தினர், வேற்று மதத்தினர், வேற்று மொழியினர் ஆகியோரின் ஆட்சியும் கலாச்சாரப் படையெடுப்புமே ஆகும். என்ற காரணத்தையும் ஆசிரியர் கூறுகிறார். 'கி.பி. 8-ஆம் நூற்றாண்டு தொடங்கி ஆறாம் நூற்றாண்டு முடியத் தமிழ. கத்தின் இருண்ட காலமென வரலாற்றறிஞர்களால் குறிக்கப் பெறும் களப்பிரர்களின் கொடுங்கோன்மை நடந்த காலங் களில் தமிழர்களின் கலை, கலாச்சாரம் அனைத்துமே சீரழிக் கப்பட்டன. சமண பெளத்த மத வளர்ச்சியும் நாடகக்கலை அழிவுக்குக் காரணமானது, இதனைப் பரிதிமாற் கலைஞரும்