பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கவிஞர் கு.சா.கி.

எது எப்படியாயினும், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான பழம்பெரும் காப்பியத்தில் இத்தகைய கற்பனை களையெல்லாம் புகுத்தலாமா என்ற வினாவும் எழக்கூடும். எழுவதும் இயற்கை. ஆனால் மூலநூலின் கருப்பொருளுக்குப் பங்கம் நேராத வகையில் வழி நூலாசிரியனின் காலத்தை ஒட்டிய கருத்துக்களை மூலநூலில் ஏற்றிச் சொல்லும் உரிமை வழி நூலாசிரியனுக்கு உண்டு. இந்த இலக்கண விதியை ஆதாரமாகக் கொண்டுதான் வால்மீகி இராமாயணத்தி லிருந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து கம்பர் இராமா யணத்தை இயற்றியுள்ளார்.

இதே நியதியைக் கொண்டுதான், வியாசர் பாரதத்தி லும், வில்லிபாரதத்திலும் காணமுடியாத அளவுக்குப் பாஞ் சாலியை வீராங்கனையாக அறிமுகப்படுத்திக் கெளரவர் களின் அவையில், தருமன்.

என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றானா தல் னைத் தோற்றபின் என்னைத் தோற்றானா...

என்று வினா எழுப்பச் செய்திருக்கிறார் பாரதியார்.

இது மட்டுமல்ல, இந்திரனின் சூழ்ச்சிக்கும் வஞ்சத் திற்கும் மிருக வெறிக்கும் ஆளாகிக் கசக்கி எறியப் பெற்றுக் இல்லாகச் சபிக்கப் பெற்ற அபலைப் பெண் அகலிகைக்கு இழைக்கப்பெற்ற அநீதியை எதிர்த்து, இக்காலத் துர்வா ;, மாறிக் கவிஞர் திரு. ச. து. சு. யோகி அவர்களும் முட் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்களும், ஒவ்வொரு குறுங்காப்பியங்களையே படைத்துப் போர்க் குரல் எழுப்பவில்லைய T2

இவைகளையெல்லாம் ஏற்றுக் கொண்ட புலவருலகம், அறிஞருலகம், சுவாமிகளின் கோவலன் நாடக ஆக்கத்தி லுள்ள மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வதற்குரிய நியாயம் இருப்பதை இந்த அவையினருக்கு வைக்கவேண்டுமென்பது தான் என் ஆசை. இதுபற்றி மேலும் விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்குமாறு புலவருலகை வேண்டி முடிக்கின்றேன்.