பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 211

நாடகக் கலைமாமணிகள் நால்வர்

இருபதாம் நூற்றாண்டு தொடங்கியபின் உள்ள அரை நூற்றாண்டு காலத்தை நாடகக்கலையின் பொற்காலம் என்று முன்பே கூறினேன்.

இந்த அரை நூற்றாண்டிலும்கூட, முற்பகுதிக் கால் நூற்றாண்டின் நாடக வளர்ச்சிக்கு, திருவாளர்கள் சங்கர தாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், ஏகை சிவ சண்முகம் பிள்ளை, முத்துச்சாமிக் கவிராயர், சதாவதானம் தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் போன்ற ஆசிரியப் பெரு மக்களும், இவர்ாளால் பயிற்றுவிக்கப் பெற்ற நாடக நிறு வனங்களும், நடிக நடிகையர்களும்தான் முக்கிய காரணமாக அமைந்தார்கள்.

அதன் பிற்பகுதிக் கால் நூற்றாண்டின் நாடகக்கலை வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்த பலருள், சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவினர்களேயாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால் டி. கே. எஸ். சகோதரர்களின் சகாப்தமென்றே இதைக் கூறலாம். இவர்கள் நாடகத்தைப் பிழைப்புக்கான ஒரு தொழிலாக மட்டும் கொள்ளாமல், சமுதாயத்திற்குச் செய்யும் தலைசிறந்த தொண்டாகவும் எண்ணிப் பணி யாற்றினார்கள்.

சுவாமிகளின் மாணாக்கரும், புகழ் வாய்ந்த பெண்வேட தாரியும், முற்காலத்தில் சிறந்த பின்பாட்டுக்காரராகவும் விளங்கிய இவர்களின் தந்தையாராகிய திரு. கண்ணுசாமி பிள்ளை அவர்களையும், அவரது அருமைச் செல்வர்களாகிய, 12வயது சங்கரன், பத்துவயது முத்துச்சாமி, ஆறு வயது சண்முகம் இரண்டு வயது பகவதி ஆகிய நால்வரையும், தமது தத்துவகள் சுவாமி மீனலோசினி வித்யா பால சபையில் 1918 ஆம் ஆண்டில் சேர்த்துக் கொண்டார் விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்றபடி, ஆறு வயது சண்முகத்தின் அறிவுதுட்பத்தையும், நடிப்புத்திறத்தையும் கண்டசுவாமிகள்